🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_37.html
*🌟திரு.ஶ்ரீ.ஶ்ரீகாந்த் கடே என்பார் புதுதில்லி பசுமைத் தீர்பாய முதன்மை அமர்வு நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டுள்ள படி ஒவ்வொரு பள்ளிகளிலும் புத்தக வங்கி துவங்க அறிவுறுத்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*
*🌟திரு.ஶ்ரீ.ஶ்ரீகாந்த் கடே என்பார் பள்ளிகளில் புத்தக வங்கி துவங்கிட உத்தரவிட வேண்டும் எனவும் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்தும் புதுதில்லி பசுமைத் தீர்பாய முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் பொருட்டும் காடுகள் அழியாமல் இருந்திடும் பொருட்டும் பள்ளிகளில் புத்தக வங்கி துவங்கிட உத்தரவிடக் கோரியும் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*🌟எனவே சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் பொருட்டு புதிய புத்தகங்கள் தயாரித்திட ஏராளமான மரங்கள் வெட்டுவதை தவிர்த்திடும் பொருட்டும், பழைய புத்தகங்களை புதியதாக தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியிலும் புத்தக வங்கி துவங்கி பழைய புத்தகங்களை மாணவர்களிடமிருந்து சேகரித்து புதியதாக வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*🌟மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கிய விபரங்களை இவ்வியக்ககத்திற்கு 23.03.2018 க்குள் இமெயில் மூலமாக (deesectioms@gmail.com) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment