*பொதுமக்களே உஷார்: ஆதார் ஆணையம் திடீர் எச்சரிக்கை!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_45.html
🌟ஆ தார் குறித்த தகவல்களை இணையதளங்களில் பதியும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் என பொது மக்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
🌟எந்த ஒரு சேவையைளம் பெற ஆதார் தகவல்கள் பதிய கோரியிருந்தால், அதை பதியும்போதோ, அல்லது பகிரும்போதோ முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களை ஆதார் ஆணையம் உஷார்படுத்தி உள்ளது.
🌟நாடு முழுவதும் 90 சதவிகிதம் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆதார் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரையில், வங்கி கணக்குகளுடனும், செல்போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணை இணைக்க கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
🌟இதற்கிடையில் பொதுமக்களின் ஆதார் தகவல்கள் தனியார்கள் மூலம் வெளியே கசிந்து வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
🌟இந்த நிலையில் ஆதார் தகவல்களை இணையதளத்தில் பகிர்ந்து கொள்வோருக்கு எச்சரிக்கை விடுத்து, ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது:-
🌟பொதுமக்கள் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்காக இணையதளத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களை பகிர்ந்துகொள்கிறபோது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இணையதளத்தில் ஆதார் அடையாள அட்டைகளை வெளியிடுவதற்கு அல்லது பதிவிடுவதற்கு ஆதார் ஆணையம் பொறுப்பு ஆகாது. இது ஆதார் ஆணையம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மற்ற அடையாள ஆவணங்களைப் போல ஆதாரும்கூட ரகசிய ஆவணம் அல்ல.
🌟ஒருவருடைய ஆதார் தகவல்கள் மட்டுமே அவரை ஏமாற்றுவதற்கு போதுமானவை அல்ல. ஒருவரது அடையாளத்தை அங்கீகரிப்பதற்கு ‘பயோமெட்ரிக்’ அங்கீகாரம் தேவைப்படுகிறது.
🌟ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது, ஆதாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது. தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆதார் தரவு தளமானது (டேட்டா பேஸ்) மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
🌟இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment