🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்குநர் அவர்களிடம் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பின்னேற்பு தொடர்பாக பல முறை கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக தற்பொழுது ஆசிரியர்களிடம் 17a விளக்கம் கேட்டு அதற்கான சரியான விளக்கத்தினைப் பெற்றுக் கொண்டு முறையான அரசாணை வெளியிட்டதும் பின்னேற்பு வழங்கலாம் என வாய்மொழியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
🌟 அதன் அடிப்படையில் தற்பொழுது பல இடங்களில் ஆசிரியர்களுக்கு 17a வழங்கப்பட்டு வருகிறது.
*வட்டார,மாவட்ட, மாநில நிர்வாகிகளே!*
🌟 முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்க தற்போது தொடக்க கல்வி அலுவலர்களால் 17 a வழங்கப்பட்டு வருகிறது.
🌟 மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சனை என்பதால் ஆசிரியர்கள் ஒரே மாதிரியான விளக்கம் தர பொறுப்பாளர்கள் வழிகாட்டுதல் செய்ய வேண்டும்.
🌟அதற்குரிய விளக்கம் எவ்வாறு எழுதுவது என்பதற்கான மாதிரி விளக்கங்களை அனுப்பி ஆசிரியர் தோழர்களுக்கு உதவிடுமாறு *_TNPTF அயன்_* சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment