Friday, 16 March 2018

*வான்வெளி அருங்காட்சியகம் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_99.html


*🌟பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள இஸ்ரோ தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்க்க பள்ளி, கல்லூரிகள் பதிவு செய்து பயன்பெறலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.*



*🌟மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், விஸ்வேஸ்வரய்யா அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை சமீபத்தில், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் திறந்து வைத்தார்.*



*🌟இதில் வான்வெளி அறிவியல், விமானவியல், வானியல், வின்வெளி இயற்பியல், விமானவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து தனித்தனியாக விரிவான விளக்கத்தை, இஸ்ரோ அங்கீகாரம் பெற்ற பெங்களூரு கல்வி நிறுவனம் அளிக்க உள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்ப விபரங்களை நேரடியாக பார்க்கவும், பங்கு பெறவும் அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்ப்பட உள்ளனர்.*



*🌟இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:*


*⚡அருங்காட்சியகத்தை காண விரும்பும் கல்வி நிறுவனங்கள் 919481422237 என்ற அலைபேசி எண், indiaiscope@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.*


*⚡ஒரு கல்வி நிறுவனத்திற்கு 45 மாணவர்களுடன் 5 கண்காணிப்பு ஆசிரியர்கள் வர அனுமதி உண்டு.*

*⚡அருங்காட்சியகத்தை காணவும், இஸ்ரோ நடவடிக்கைகள் குறித்து அறியவும் அனுமதி இலவசம்.*

*⚡இதற்கு பதிவு செய்ய மார்ச் 31 கடைசி நாள், இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



 

No comments: