Wednesday, 14 March 2018

*சிவகங்கையில் சிகிச்சைக்காண மருத்துவ காப்பீடு - மீண்டும் வென்றது TNPTF*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/tnptf.html


*பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*


*🌟TNPTF என்றாலே வெற்றி என்று தான் அர்த்தம் அந்த வகையில் பல NHIS திட்டத்திலிருந்து பல தோழர்களுக்கு மருத்துவ செலவு தொகையினை பெற்றுத்தந்து மகத்தான சாதனை புரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்த இந்த சாதனையின் செய்தி தொகுப்பு*


*🌟சிவகங்கை மாவட்டம், காரைக்குடி SMS பெண்கள் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி.சுகுணகுமாரி அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மானகிரி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.*

*🌟சிகிச்சை செலவு லட்சத்தை தாண்டியபொழுதும் 24 ஆயிரம் மட்டுமே மருத்துவ காப்பீடு அனுமதிக்கப்பட்டது. திருமதி.சுகுணகுமாரி அவர்கள் சார்ந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களிடம் முறையிட்டு சிகிச்சை செலவு பணம் முழுவதையும் பெற்று தர வேண்டினார். நாட்கள் நகர்ந்ததே தவிர பலன் ஏதுமில்லை. அதன் பின் கல்லல் ஒன்றியம் அப்பாகுடியில் ஆசிரியராக பணியாற்றும் அவரது உறவினரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினருமான திரு.செல்வபாண்டியன் அவர்களிடம் நமது இயக்கத்தின் மூலம் உதவிட கோரிக்கை வைத்தார்.* 

*🌟திரு.செல்வபாண்டியன் அவர்கள் நமது இயக்கத்தின் கல்லல் வட்டாரச் செயலாளர் திரு.ஆரோக்கிய லூயிஸ் லெவே அவர்களிடம் விபரங்களை பகிர்ந்துள்ளார். அவர் உடனடியாக மாவட்ட கிளைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் நாம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு காப்பீடு சம்பந்தமாக தீர்வு காண மாநில மையத்தால் நியமிக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட பொருளாளர் திரு.செல்வகணேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.* 

*🌟திரு.செல்வகணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் அடம்பிடித்த கார்ப்பரேட் வர்க்கம் இயக்கத்தின் உறுதியான நடடிக்கையால் ரூ.1,09,888 ரூபாயை இன்று அனுமதித்து உத்தரவு வழங்கியது.* 


*⚡எடுத்த முயற்சியில் இம்மியளவும் சோடை போகாத இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறது.*


தகவல் பகிர்வு;

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
சிவகங்கை மாவட்டச் செயலாளர்
TNPTF

*⚡மாறுபட்ட இயக்கத்தை சேர்ந்தவர் உதவிட கோரியும் நொடிப்பொழுது தாமதிக்காமல் ஒத்துழைப்பு நல்கிய மாநில மையத்திற்கும்,* 

*⚡போர்க்குணம் படைத்த தோழர் செல்வகணேஷ் அவர்களுக்கும்,* 

*⚡சிவகங்கை மாவட்ட மையத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியினை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: