Wednesday, 4 April 2018

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் செய்தி அறிக்கை-நாள்:03.04.2018*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/03042018.html


*🌟பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.*


*🌟நடைபெற்று முடிந்த முதல்கட்ட கூட்டுறவுத் தேர்தலில் இன்று(03.04.2018) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்கங்களில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள் முன்னெப்போதையும்விட அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும்,நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.*


*🌟இவ்வெற்றி நம் இயக்கத்தோழர்களின் அயராத உழைப்பு,ஆற்றல்மிகு செயல்பாடுகள்,நம் பேரியக்கத்தின்மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்*


*🌟வெற்றி பெற்ற நம் பேரியக்கத் தோழர்கள் சிக்கன நாணயச்சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடாகவும்,நம் இயக்கத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கேற்பவும் செயல்பட்டு பெருமை சேர்த்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் வாழ்த்தி மகிழ்கிறது*


*🌟நடக்கவுள்ள அடுத்தடுத்த கட்ட சிக்கன நாணயச்சங்க தேர்தல்களிலும் நம் இயக்கத் தோழர்கள் கரம் கோர்த்து,உரம் சேர்த்து,களப்பணியில்கடுகளவும் சோராது பணியாற்றி பெருவெற்றி பெற்றிட மாநில மையம் வாழ்த்துகிறது*


*🌟தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: