Tuesday, 3 April 2018

*சர்வதேசக் கவிதைப் போட்டி -காலநீட்டிப்பு - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_3.html


🌟(சர்வதேசக் கவிதைப் போட்டிக்கு கவிதை அனுப்ப 30 ஏப்ரல் 2018 (30 APRIL 2018) ஆம் தேதி வரை கால நீட்டிப்பு)




🌟மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் சர்வதேசக் கவிதைப் போட்டிக்கு கவிதை அனுப்ப 30 ஏப்ரல் 2018 (30 APRIL  2018) ஆம் தேதி வரை கால நீட்டிப்பு






பெறுதல்


            மேன்மைமிகு படைப்பாளர்கள்
                      இந்தியா/அயல்நாட்டார்




அன்புடையீர்இ வணக்கம்.




 தங்களது மேலாலான பார்வைக்கும், பரப்புரைக்கும்.




🌟மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் சர்வதேசக் கவிதைப் போட்டிக்கு  படைப்பாளர்களின் அன்பு வேண்டுதலுக்கு இணங்க 30 ஏப்ரல் 2018 ஆம் தேதி வரை படைப்பாளர்கள் கவிதை அனுப்பக் கால நீட்டிப்பு செய்யப்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



🌟மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சர்வதேச தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜீலை- 2018 ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



🌟பள்ளி இகல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும், ஊக்கப்படுத்தும் எண்ணதத்திலும் மேலும் இளம்  படைப்பாளர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணரும் நோக்கத்திலும், சிறந்த படைப்பாளராக இருந்தும் உலகிற்கு அறிமுகம் இல்லாத படைப்பாளர்களை உலகிற்கும், இளைய சமுதாயத்திற்கும் அறிமுகப்படுத்தும் நோக்கத்திலும் இச் சர்வதேசக் கவிதைப்போட்டி நடத்த எம் பல்கலைக்கழகத்தின் மாண்பமைத் துணைவேந்தர் வழங்கிய  ஊக்கத்தின் அடிப்படயில் இப் போட்டி நடத்தப்படுகிறது.



🌟இக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு கதை எழுத விருப்பமுள்ளவர்கள், தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழரின் வாழ்வியல் முறைகள், பண்பாடு அடையாளங்கள், சாதனைகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் என வரிசைப்படுத்தப்பட்ட பொருண்மைகளிலும் ( தமிழர்களின் மரபுகளை வெளிப்படுத்தும் தன்மையில் ) இன்னபிற பொருண்மைகளிலும்  கவிதையின் கருவாக அல்லது உட்பொருளாகத் தெரிவு செய்து கவிதை  எழுதலாம்.



🌟கவிதை எழுத விருப்பமுள்ள படைப்பாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கிணங்க போட்டியில் பங்கேற்கும் படைப்பாளர்கள் மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை ஆகிய வழிகளில் கவிதையை எழுதி ஏ4 தாளில் , 12 அளவுள்ள யுனிக்கோடு அல்லது பாமினி எழுத்துருவில் அல்லது பிற எழுத்துருவில்  1.5 இடைவெளியில் தட்டச்சு செய்து,  24 வரிகளுக்கு மிகாமலும் 150 சொற்களுக்கு மிகாமலும் ஆக்கம் செய்து கவிதையைத் தருதல் வேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட கவிதையை வோடு பைலில் அனுப்ப வேண்டும். பி டி எப் பைலாக அனுப்பக் கூடாது. உடன் கவிதை தட்டச்சு செய்த எழுத்துருவையும் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கவும். மேலும் கவிதையின் நகல் ஒன்றையும்இ பாஸ்போட் அளவுள்ள புகைப்படம் ஒன்றையும் அஞ்சல்வழி அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.



🌟போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வயது வரம்போ, எந்தவிதப் பதிவுக் கட்டணமோ இல்லை. குறிப்பாக ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டும் எழுத அனுமதிககப்படும்.




🌟மிகச் சிறந்த கவிதையாகத் தெரிவு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசு ரூ. பத்தாயிரம்;  (10.000) , இரண்டாம்  பரிசு ரூ. ஏழாயிரம் (7000), மூன்றாம் பரிசு ரூ ஐந்தாயிரம். (5000 ) ஊக்கப் பரிசுக்குத் தெரிவுசெய்யப்படும்  பத்துக் கவிதைகளுக்கு மட்டும்  தலா ரூ .ஆயிரம் (1000 )வழங்கப்படும் .



🌟போட்டிக்கு கவிதையைத் தெரிவு செய்வதும், நூலாக்கம் செய்வதும். நிருவாகத்தைச் சேர்ந்தது. எந்தப் படைப்பாளரும் அனுப்பிவைத்த கவிதையைத் திருப்பி அனுப்பக் கோருவதும், புத்தகமாக்கும் போது மறுப்புத் தெரிவிப்பதும், உரிமை கோரவும் இயலாது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.



🌟போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் கவிதைகள் எந்த ஒரு நூல்களிலும் அல்லது இதழ்களிலும் பிரசும் செய்யப்படாமல் இருக்க வேண்டும். மேலும் எந்தப் போட்டிகளுக்கும் அனுப்பிவைக்கப்படாத கவிதையாகவும் இருக்கவேண்டும்.



🌟தகுதியான படைப்பாளரைக்கொண்டு தங்களின் கவிதைகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவுசெய்யப்படும்.



🌟மிகச் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது புலனத்தின் வாயிலாகவோ  அல்லது தொலைபேசி வாயிலாகவோ முறையான தகவல் தெரிவிக்கப்படும்.



🌟குறிப்பாக கவிதையின் முகப்புப் பகுதியில் தங்களின் முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரியைத் மிகத் தெளிவாகக் குறிப்பிடவும். 



🌟முழுமைபெற்ற கவிதையை 30.04.2018 ( 30 APRIL 2018 )ஆம் தேதிக்குள் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் mkuannalcon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.



🌟தாங்கள் அனுப்பிவைக்கும் சிறந்த கவிதைகள் அனைத்தும்  நூல் வடிவம் பெறுவதற்கும், வெளியிடுவதற்கும் அனுமதிக் கடிதம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். அனுமதிக் கடிதம் அனுப்பிவைக்காத படைப்பாளர்கள், அனுமதிக் கடிதம் அனுப்பி வைத்ததாகக் கருதப்படும். எந்தக் கவிதைகளுக்கும்   தன்னிச்சையாக நிதி வழங்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



🌟கவிதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள  சர்வதேசக் கவிதைப் போட்டியின் போட்டியின்  ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான  முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொள்ளவும். (தொடர்பு எண்:  109488616100 )                  



🌟தொடர்பு முகவரி


முனைவர் போ.சத்தியமூர்த்தி
(சர்வதேச  கவிதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்)
உதவிப்பேராசிரியர் & தலைவர்
தமிழியல்துறை தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை -625 021
தமிழ்நாடு,இந்தியா
cell  : 9488616100


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: