Sunday, 1 April 2018

*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ் மாநிலக் குழுவின் கூட்ட முடிவுகள் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அறிவிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_1.html


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.*


*🌟(31.03.2018) நேற்று சனிக்கிழமை இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.*


*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ் மாநிலக் குழுவின் கூட்ட முடிவுகள்:*



*🌟தீர்மானங்கள்:*

*⚡உலகப் பகழ்பெற்ற இயற்பியலாளரும், வானவியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கின்ஸ், தேனி மாவட்ட முன்னாள் தலைவர் போடி.பொன்னையா அவர்களின் துணைவியார் திருமதி.சென்பகவள்ளி அம்மையார், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆசிரியர் திருமதி.உஷா, சிரியா போரில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள், குரங்கணி மலையேற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட காட்டு தீ விபந்தில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12 வது மாநில அமைப்புத் தேர்தலில் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.ச.மயில் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில அமைப்பாளராக தோழர். ச.மயில் அவர்களை அங்கீகரித்து இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*


*⚡05.04.2018 முதல் 08.04.2018 முடிய அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் ரூ.50000 நிதி உதவி அளித்திட  இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*


*⚡04.05.2018 முதல் 06.05.2018 முடிய 3 நாட்கள் ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 7 வது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய செயற்குழு நிர்ணயித்த எண்ணிக்கையில் ஒவ்வொரு சங்கமும் பிரதிநிதிகளையும், பார்வையாளர்களையும் தவறாது அனுப்பிட இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.*


*⚡தேசிய பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாட்டையும், அதனுடன் இனைந்து அகில இந்திய பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டையும் 2018 சூலை மாதம் தமிழகத்தில் நடத்திடவும், மாநாடு நடைபெறும் இடம், தேதி ஆகியவற்றை அடுத்த மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து கொள்வது என இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*


*⚡ஜேக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கையான மே-8 கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டத்தினை வெற்றிகரமாக்கிட தமிழகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்கள் முழு மூச்சுடன் களப்பணியாற்றிட இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*


*⚡தோழமையுடன்;*

*தோழர்.ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: