🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_24.html
*கள்ளர் பள்ளிக் கிளைக்கான போராட்டம் மாபெரும் வெற்றி*
*சுற்றறிக்கை எண் - 4, நாள் - 24.04.2018.*
*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளிக்கிளை மாவட்ட செயலாளர் திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்துவிட்டு மீண்டும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணிநியமனம் வழங்கக்கோரி நமது பேரியக்கத்தின் மாநில அமைப்பு அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.*
*🌟நாளை (25.04.2018) பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் தோழர்களுடன் சென்னை ஏழிலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தவிருந்த நிலையில் நேற்று (23.04.2018) மாலை சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் திரு.சாரங்கன் ஐ.பி.எஸ், துணை ஆணையர் திரு. திருநாவுக்கரசு ஐ.பி.எஸ், உதவி ஆணையர் திரு.ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் நம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.*
*🌟நமது கோரிக்கையின் நியாயம் குறித்து அவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நம்முடைய கோரிக்கைத் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று (23.04.2018) காலை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் திரு.கார்த்திக் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசிய விவரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டது.*
*🌟அரசு தொடர்ச்சியாக இன்று (24.04.2018) காலை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் (பொறுப்பு) திரு.வள்ளலார் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நம்முடைய நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு திரு.வாஞ்சிநாதன் அவர்களுக்கு முன்பு பணியாற்றிய போடி-கிழக்கு அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிக்கே பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை மாநில மையத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்ட பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் திருமதி. மூ.மணிமேகலை, பொதுச்செயலாளர் திரு.ச.மயில், மாநிலப் பொருளாளர் திரு.க.ஜோதிபாபு, துணைப் பொதுச்செயலாளர் திரு.தா.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.*
*🌟எனவே நம் பேரியக்கத் தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்திற்கான சென்னை பயணத்திட்டத்தைக் கைவிட்டு மே 8 ஜேக்டோ ஜியோ முற்றுகைப் போராட்ட நிகழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து ஜேக்டோ ஜியோவின் பிரச்சாரப் பயணத்தில் இரண்டறக் கலந்து மே 8 சென்னை முற்றுகைக்கு செயல்வடிவம் கொடுத்து நமது பேரியக்கத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தி இமைப்பொழுதும் சோராமல் சுற்றிச்சுழன்று பணியாற்றிட மாநிலமையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
⚡தோழமையுடன்;
*தோழர்.ச.மயில்,*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment