🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_23.html
*சுற்றறிக்கை எண் - 3, நாள் - 23.04.2018*
*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*🌟"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவி பாரதி.*
*🌟தனியொரு உறுப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பேரியக்கத்தோழர்களைத் திரட்டி நீதியை நிலைநாட்டிட போராடுகிற மகத்தான பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*🌟அவ்வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளிக் கிளையின் மாவட்டச்செயலாளர் என்ற ஒரே காரணத்திற்காக, நம் இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கப்பட்ட தோழர்.ப.வாஞ்சிநாதன் அவர்களை மீண்டும் பணியாற்றிய பள்ளியிலேயே நியமிக்கக்கோரி 25.04 2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம் நம் பேரியக்க நிகழ்வில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம் பேரியக்கத் தோழர்கள் உணர்ந்து களப்பணிகளில் கடுகளவும் தொய்வின்றி இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிட வேண்டுகிறேன்.*
*🌟வங்கக்கடலின் எதிரில் அமைந்துள்ள எழிலகத்தில் 20.04.2018 தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழுவின் முடிவின்படி 25.04.2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு எத்தனையெத்தனை தடைகள் ஏற்படினும் அவற்றைத் தகர்த்தெரிந்து பல்லாயிரக்கணக்கில் அணிதிரள்வோம். நீதி கிடைக்கும் வரை அங்கேயே காத்திருப்போம்.*
*"சீற்றத்தில் வங்கக்கடலைத் தோற்கடிப்போம், தோற்றத்தில் அலைகடலை அச்சுறுத்துவோம், அலைகள் எண்ணிக்கையை நம் தலைகளின் எண்ணிக்கை வெல்லட்டும், நீதியை நிலைநாட்ட நெஞ்சம் நிமிர்த்திடுவோம், நேர்மையற்ற வஞ்சத்தை முறியடிப்போம்"*
⚡தோழமையுடன்;
*தோழர்.ச.மயில்,*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment