🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/8.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி*
*🌟சென்னையில் மே 8 ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பங்கேற்க மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர், மணிமேகலை தலைமை வகித்தார், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர்.செல்வராஜ் வரவேற்றார், மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் விளக்கவுரையாற்றினார்.*
*🌟கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த ஆணையிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைபு சார்பில் மே 8 ம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.*
*🌟தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் உள்பட 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.*
*🌟மாநில பொருளாளர் ஜோதிபாபு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர்.பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், பொருளாளர் தோழர்.பாப்ஹையஸ், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.ரவீந்திர ராஜன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment