🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_29.html
*🌟தொடக்கப்பள்ளிகளை மூடும் எண்ணத்தை அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் கூறியுள்ளார்.*
*🌟நெல்லையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் மணிமேகலை தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் சிறப்புரை ஆற்றினார், மாநில செயலாளர் தோழர் முருகேசன் மற்றும் நெல்லை மாவட்டச்செயலாளர் தோழர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.*
*பின்னர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் கூறியதாவது:*
*🌟பள்ளிக்கல்வித்துறை தினமும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள வேறு பள்ளிகளுடன் இணைக்கப் போவதாகவும், மூடப்படும் பள்ளிகளை நூலகமாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 3450 பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்விச் சூழல் பாதிக்கப்படும்.*
*🌟பள்ளிகளை தொடர்ந்து மூடினால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும். கேரளாவில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற கொள்கையால் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் முடிவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் மட்டுமின்றி ஏழாயிரம் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர்.*
*🌟இதே போல் மேல்நிலை வகுப்புகளில், நகர்புறங்களில் 30 மாணவர்களுக்கு கீழும், கிராமப்புறங்களில் 15 மாணவர்களுக்கு கீழும் உள்ள பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.*
*🌟அரசு இந்த திட்டங்களை உடனே கைவிட வேண்டும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களை சந்தித்து பேச உள்ளோம்.அதன் பிறகும் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.*
*🌟மெட்ரிக், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தொடக்கநிலை மாணவர்களைச் சேர்ப்பதாலும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. இதை கைவிட்டு தனியார் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢om
No comments:
Post a Comment