*நோ.,பேனா நோ.,பேப்பர்! கையடக்க கணிணியில் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள்!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_34.html
🌟இராமநாதபுரம்: பேனா இல்லாமல் பேப்பர் இல்லாமல் (டேப் என அழைக்கப்படும்) கையடக்க கணிணியில் தேர்வு எழுதி பாடம் கற்று அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.
🌟ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது பாரிவள்ளல் நகராட்சி அரசுப் பள்ளி, இந்த பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🌟அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
🌟இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
🌟இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் 81 மாணவ மாணவிகள் கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.
🌟நவின விஞ்ஞான உலகத்தின் இளையதலைமுறைகள் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை சார்பில் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
🌟இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.
🌟இது குறித்து கையடக்க கணிணியில் பயிலும் முதலாவது வகுப்பு மாணவி எமிம்மாஜீலினாயிடம் பேசும் போது.,
🌟நாங்க இப்ப டேப்ல படுச்சுகிட்டு இருக்கோம். அது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. டேபுக்குள் புக்கே இருக்கு. அத நாங்க ஸ்கேன் பன்னி அதுல வர கதைகள் படங்கள் பாட்டுகள் ரைம்ஸ் இது எல்லாமே வரும். இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது ரொம்ப ஈஸியா இருக்கு. எங்க பெரன்ட்ஸ்கிட்டையும் இத பத்தி சொல்லிருக்கோம் ரொம்ப ஈஸியா இருக்குன்னு.
🌟முதலாவது வகுப்பு மாணவன் ஜான்பெனடி: நாங்க டேப்பில படிக்கிறோம் அது ரொம்ப சந்தோஸம்மா இருக்கு பென்சிலு ரப்பரு ஸ்கேலு எதும்மே இல்லாம்ம படிக்கிறோம் விடியோ ஸ்டோரி எல்லாம்மே நாங்களே ஸ்கேன் பன்னி படிக்கிறோம்.
🌟இரண்டாவது வகுப்பு மாணவி ரபினாபேகம்: நாங்க எங்க ஸ்கூல்ல டேப் வச்சுருக்கோம் நாங்க எல்லாத்தையும் டேப்ல தான் படிக்கிறோம் மொத்தம் 25 டேப் இருக்கு / 1ம் வகுப்பில் இருந்து மூன்றாவது வர டேப் யூஸ் பன்னுறோம் நாளாவது அஞ்சாவது லேப்டாப் வச்சு படிக்கிறாங்க எங்க டீச்சர் இந்த டேப்ல ரெம்ப நல்லா சொல்லி தராங்க.
🌟பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ-ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளதாக தெரிவித்தார்.
🌟இந்த பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோர் சொர்ணகவிதா: ப்ஸ்ட்ல இருந்ததோடு வரைக்கும் பிள்ளைங்க டேப் யூஸ் பன்னுறாங்க. டேப்ல தான் பரீட்சையும் எழுதுறாங்க. சோ, இந்த மாதிரி டேப் யூஸ் பன்னுறது அரசு பள்ளியின்னு பாக்குறப்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்குது.
🌟அதுமட்டும் இல்ல சிபிஎஸ்சி சில பஸ்லைய்யோ அல்லது மெட்ரிக்லோஷன் ஸ்கூல்லைய்யோ டேப் யூஸ் பன்னி எக்ஸாம் எழுதி நான் இன்னும் பாக்கல அரசு பள்ளியில டேப் யூஸ் பன்னுறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்கு.
🌟நாங்க படிக்கிற காலத்துல இதெல்லலாம்இல்ல இனி ப்யூச்சர்ல பஸ்ட் ஸ்டாண்டடுல இருந்து பத்தாவது வரைக்கும் கொண்டு வந்த இன்மும் சந்தோஷம்மா இருக்கும் என கூறினார்.
YOUTUBE VIDEO LINK:
https://youtu.be/43PNdyJtE6M
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment