Friday, 13 April 2018

*கூட்டுறவு சங்க தேர்தலில் தடை நீடிப்பு மதுரை ஐகோர்ட் உத்தரவு..*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_62.html


🌟தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ அர. சக்கரபாணி உட்பட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 


🌟பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

🌟இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வீர கதிரவன், அஜ்மல்கான் வாதிடுகையில்,


🌟முதல் கட்டமாக 4,684. கூட்டுறவு சங்கங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 4,118 பேரும், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற 4,557 கூட்டுறவு சங்கங்களில் 3,581 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

🌟ஒவ்வொரு கூட்டுறவு சங்க இயக்குனர் குழு இடங்களில் 6 பொதுப்பிரிவு, 3 பெண்கள், 2 ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு பொதுப்பிரிவில் 6 பேர், பெண்கள் 3 பேர், ஆதிதிராவிடர்கள் 2 பேரிடம் மட்டுமே வேட்புமனு பெறப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையைவிட அதிகமாக வேட்புமனு பெறப்படவில்லை. எனவே திட்டமிட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறையில் அசாதாரண சூழல் நிலவும் போது நீதிமன்றம் தலையிடலாம் என்றார்.

🌟இதையடுத்து, இந்த வழக்கில் அதிமுக ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


🌟பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் எத்தனை உறுப்பினர்க ள் உள்ளனர், எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்ற பட்டியலை ஏப். 23-க்குள் மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். 


🌟மனுதாரர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் குளறுபடிகள் தொடர்பாக மனு தாக்கல் செய்ய வேண்டும். 


🌟அதுவரை கூட்டுறவு சங்க தேர்தலில் தற்போதைய நிலை தொடர வேண்டும் (தடை) என்ற உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 23-க்கு ஒத்திவைத்தனர்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: