🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_36.html
*பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்களே! வணக்கம்*
🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள்,
⚡தோழர். மணிமேகலை,
மாநில தலைவர்.
⚡தோழர். ச.மயில்,
மாநில பொதுச்செயலாளர்.
⚡தோழர். ஜோதிபாபு,
மாநில பொருளாளர்.
⚡தோழர். கணேசன்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்.
ஆகியோர் இன்று திங்கட்கிழமை (16.04.2018) சென்னையில் உள்ள DPI வளாகத்தில்
⚡தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.அ.கருப்பசாமி அவர்களையும்,
⚡பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.ரெ.இளங்கோவன் அவர்களையும்,
மேலும் சென்னையில்,
⚡மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையின் ஆணையர் (பொறுப்பு) திரு.வள்ளளார் அவர்களையும்
சந்தித்து கோரிக்கை மணு வழங்கப்பட்டது.
*🌟தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு செய்தி துளிகள்:*
⚡பள்ளி கோடை விடுமுறையில் அதாவது மே மாத இறுதிக்குள் தொடக்கக்கல்வி துறையில் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வினை முடிக்க வேண்டும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும்,
⚡பி.லிட் தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பி.எட் உயர்கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்தும் உத்தரவு மற்றும் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் இதுவரை செய்யப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
⚡முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதற்கான பின் அனுமதி உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,
⚡மேலும் ஆசிரியர் தொடர்பான குறைகள் குறித்தும் கோரிக்கை மணு அளிக்கப்பட்டது.
*🌟பள்ளிக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு செய்தி துளிகள்:*
⚡பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.ரெ.இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்பட்டது.
*🌟மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறையின் ஆணையர் (பொறுப்பு) உடனான சந்திப்பு செய்தி துளிகள்:*
⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி கிளையின் பொறுப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காகப் பழிவாங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் திரு.ப.வாஞ்சிநாதன் அவர்களுக்கு பணியாற்றிய பள்ளியிலேயே மீண்டும் பணி வழங்கக் கோரியும், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் அராஜக அதிகாரி இணை இயக்குநர் திரு.பொன் குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு மணு கொடுக்கப்பட்டது.
🤝தோழமையுடன்;
*தோழர். ச.மயில்,*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment