Friday, 6 April 2018

*இலவச, 'அம்மா வை பை' சேவை இன்று துவக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_65.html


🌟இலவச, 'அம்மா வை பை' சேவை இன்று துவக்கம் 



🌟மெரினா, மதுரை உட்பட, தமிழகத்தின், ஐந்து இடங்களில், இலவச, 'அம்மா வை பை' வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.



🌟'தமிழகத்தில், முக்கிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில், வை பை என்ற, கம்பியில்லாஇணையதள சேவை வழங்கப்படும்' என, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அறிவித்திருந்தார்.



🌟இதன்படி, முதற்கட்டமாக, 50 இடங்களில், இலவச, 'வை பை' சேவையை, செயல்படுத்த, தமிழ் நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 



🌟முதற்கட்டமாக இன்று, ஐந்து இடங்களில், வை பை சேவை, செயல்பாட்டிற்கு வருகிறது.



*இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:*



🌟இலவச, 'அம்மா வை பை' சேவை, சென்னை, மெரினா உழைப்பாளர் சிலை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்கள் என, ஐந்து இடங்களில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 



🌟முதல், 20 நிமிடங்கள் இந்த சேவையை, இலவசமாக பயன்படுத்தலாம்.அதன் பின், ஒரு மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் இந்த சேவையை தொடர முடியும்.



🌟வை பை ஆன் செய்ததும், ஒரு திரை தோன்றும், அதில், பெயர், மொபைல் நம்பர், இ மெயில் முகவரியை பதிவு செய்ததும், நம்பருக்கு, ரகசிய எண் வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து, வை பை சேவையை பயன்படுத்தலாம்.



🌟20 நிமிடங்கள் முடிந்ததும், வை பை இணைப்பு, தானாக துண்டிக்கப்படும். 



🌟அதன் பின், கட்டணம் செலுத்தி, சேவை பெறலாம். 



🌟கட்டணத்தை,'நெட் பேங்கிங்' வழியாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்.இவ்வாறு அவர்கூறினார்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: