Friday, 6 April 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_96.html


*சுற்றறிக்கை எண் -2,   நாள்- 05.04.2018*


*🌟பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


🌟தற்போது தமிழகமே காவிரி நதிநீர் பிரச்சனையில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகதத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையாகவும், தமிழகத்தின் உரிமைப் பிரச்சனையாகவும் உள்ள காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தி எழுந்துள்ளது.


🌟காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதற்குரிய கால அவகாசம் முடிந்து விட்ட நிலையிலும் கூட மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை என்பதும், அதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் தரவில்லை என்பதும் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய கோபக்கனலை ஏற்படுத்தியுள்ளது.

🌟காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி என்பது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகிற ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

🌟எனவே தமிழ்நாட்டின் பொது நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்க வலியுறுத்தியும், அதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வலியுறுத்தியும் அந்தந்த மாவட்டக் கிளைகள் முடிவெடுத்து உகந்த தேதியில், விரைவில் வட்டார அளவிலோ அல்லது வட்ட அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ தனிச் சங்க நடவடிக்கையாகவோ அல்லது தோழமைச் சங்கங்களுடன் இணைந்தோ ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்திடவும், இது தொடர்பாக நமது இயக்கத்தின் சார்பில் சுவரொட்டிகளை (Wallposters) வெளியிடவும் நம் பேரியக்கத்தின் மாவட்ட, வட்டார, நகர கிளைகளின் நிர்வாகிகளை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

🌟தோழமையுடன்;   

*தோழர்.ச.மயில்,*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: