*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_70.html
*⚡கண்டன அறிக்கை⚡*
*🌟தூத்துக்குடியில் நாசக்கார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் தங்கள் இன்னுயிரை இழந்த அப்பாவி பொதுமக்களின் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*🌟22.05.2018 செவ்வாய் கிழமை அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்திராத படுபாதகச் செயல் அறங்கேறியுள்ளது.பள்ளி மாணவி உட்பட இதுவரை 11 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கான போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு கையாண்ட விதம் ஆங்கிலேய ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது.*
*🌟காவல்துறையின் இக்கோரத்தாண்டவத்திற்கு தமிழக அரசே முழுப்பொறுப்பேர்க்க வேண்டும். சமீபகாலமாக அநீதிக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு கடைபிடிக்கும் நடைமுறை தீவிரவாதிகளை ஒடுக்க கையாளப்படும் நடைமுறைக்கு இணையாக உள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான காவல்துறையின் அத்துமீறலுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.*
*⚡தோழமையுடன்;*
*_தோழர். ச.மயில்,_*
*_மாநில பொதுச்செயலாளர்,_*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*
🔫🔫🔫🔫🔫🔫🔫🔫😂😂😂😂😂😂😂😂
*ஸ்டெர்லைட் என்னும் நாசக்கார நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கா(ஏ)வல் துறையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் பலியான என் அருமை தோழர்களுக்கு (தமிழர்களுக்கு) _வீர வணக்கத்தையும்,_ _ஆழ்ந்த இரங்களையும்_ _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
😥😥😥😥😥😥😥😥💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment