Monday, 21 May 2018

*கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_98.html           


*🌟பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.*


*🌟ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது.*


*🌟மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு.*


*🌟பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*


*கல்லூரிகள்:*

*⚡1.சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007*

*⚡2.நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002*

*⚡3.கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358*:

*⚡4.கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625*

*⚡5.உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052*

*⚡6.கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635 110*


*🌟கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன.* 


*🌟துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:*

*⚡1.BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306*

*⚡2.BTech (Food Technology) 4 years  - 40*

*⚡3.BTech (Poultry Technology) 4 years  - 40*

*⚡4.Technology) 4 years - 20*


*🌟மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம்.*


*🌟விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல்*


*⚡முகவரி:*

*"The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"*


*🌟மேலும் முழுமையான விவரங்களை*



https://drive.google.com/file/d/13Fo5hI8Awz7aTg1rJy7UBVc4HNsM5oq9/view?usp=drivesdk

*🌟என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: