Wednesday, 16 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_76.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*

*_⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை,_*

*_⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில்,_*

*_⚡மாநில பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு,_*

*_⚡மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர்.கணேசன்_*

*ஆகியோர் இன்று (16.05.2018) செவ்வாய் கிழமை,*

*_⚡மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்களையும்,_*

*_⚡மதிப்புமிகு தொடக்கக்கல்வி இணை இயக்குநர் திருமதி.ஶ்ரீதேவி அவர்களையும்,_*

*DPI வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சந்தித்து ஆசிரியர்கள் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த மனு வழங்கினார்கள்.*


*கோரிக்கைகள்:*

*⚡2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிகழ்வை கோடை விடுமுறை நாள்களில் நடத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும்,*


*⚡ஆசிரியர்களின் சேமநலநிதி கணக்குகளை அரசு புள்ளி விபரம் மையத்திலிருந்து மாநிலக் கணக்காயருக்கு மாற்றுதல், ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியர்களின் சேமநலநிதி கணக்குகள் முடிக்கப்படாமல் உள்ளதை விரைந்து பணியை முடிக்க கீழ்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டியும்,*

*⚡பி.லிட் தகுதிபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பி.எட் உயர்கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்தும் உத்தரவு மற்றும் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் இதுவரை செய்யப்படாமல் நிறுத்தி வைத்துள்ள கீழ்நிலை அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கிட வேண்டுமாறும்,*

*⚡மேலும் சில ஆசிரியர் குறைகளை நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.*

தோழமையுடன்;

*_தோழர். ச.மயில்,_*

*_மாநில பொதுச்செயலாளர்,_*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி._*  



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: