Saturday, 5 May 2018

*INSPIRE AWARD - மாணவர் விபரங்களை பதிவு செய்தல் தொடர்பான செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/inspire-award.html


*🌟தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நடத்தும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது*


*புத்தாக்க அறிவியல் விருதை மேம்படுத்தும் திட்டம் - (INSPIRE MANAK)*


*2018 முதல் 2019 வரை*


*🌟2018-19 ம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான புதிய பதிவுகள் ஏப்ரல் 1 -ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதற்காகப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்தது போலவே இந்த ஆண்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக www.inspireawards-dst.gov.in என்ற இணையதளம் 2018 ஏப்ரல் 1 - ந் தேதியிலிருந்து 2018 சூன் 30 - ந் தேதி வரை செயல்படும்.*


*🌟முன்னரே தயாரிக்கப்பட்ட புதுமையான வடிவமைப்பற்ற காட்சிப் பொருட்களைப் பார்வைக்கு வைப்பது. ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் அதிக அளவில் பங்கெடுப்பது என்பதை விட சுயமான, தரமான சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், IISC, IIT, NIT, IISER போன்ற நிறுவனங்கள் மூலமாக அவற்றை மேம்படுத்தி அதன் மூலம் அத்திட்டங்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற வகையில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுத் திட்டம் புதிய வகையில் செயல்பட்டு வருகிறது.*


*🌟2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கு தங்கள் பள்ளியில் தேர்ந்தெடுத்துள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து முதன்மைக்கல்வி அலுவலர் (DA-DISTRICT AUTHORITY) க்கு உடனே அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


*🌟பள்ளியைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் பதிவு செய்தவுடன் தாங்கள் செய்யப்போகும் காட்சிப் பொருள்களுக்கான திட்ட வரைவுகளை இணையதளத்தில் கேட்டுள்ள படி பதிவு செய்ய வேண்டும்.*


*🌟மாணவர்கள் அளிக்கும் சிறந்த திட்ட வரைவுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இவற்றை ஆழ்ந்து சிந்தித்துத் தகுந்த நூல்களைப் படித்து வல்லுநர்களின் உதவி பெற்று சிறப்புற வடிவமைத்து அளிக்க வேண்டும்.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: