Saturday, 5 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_5.html


*சுற்றறிக்கை எண் - 5,* *நாள்:04.05.2018.*


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துகள்! வணக்கங்கள்!*


*🌟மே 8 வரலாற்று நிகழ்வுக்கு இன்னும் 3 தினங்கள் மட்டுமே உள்ளன. தினம் தினம் ஒரு தினம் வந்தாலும், மே 8 என்பது தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒரு புரட்சிக்கான தினம்!*


*🌟இது 1988 க்குப் பின்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்கின்ற சென்னை கோட்டை முற்றுகைக்கான தினம்.தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டக்களத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கண்டு அதிகார வர்க்கமும், சதிகார வர்க்கமும் முற்றிலும் நொறுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.*


*🌟போராட்டக்களம் நோக்கிப் பயணிக்கும் போது தடைகள் வருவது தவிர்க்க முடியாதது. தடைகளும், இடையூறுகளும் எதிர்த்து வந்தால் தான் அது போருக்கான பயணம் இல்லையென்றால் அது ஏதோ ஒரு ஊருக்கான பயணம் என்பதை நம் தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.*


*🌟எனவே, பேருந்து அனுமதி ரத்து, பேருந்து உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் போன்றவைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் வழக்கமான சதிகார ச் செயல்கள் என்பதை உணர்ந்து, எவ்வழியேனும் நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் களத்தில் வந்து சங்கமிக்க பந்தயக் குதிரையின் வேகத்தோடு களப்பணியாற்றுங்கள்.*


*🌟1985 ஐப் பார்! 1988 ஐப் பார்! என்று சாதனை படைத்த நம் முன்னத்தி ஏர்களின் முழக்கம் நம் செவிகளில் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இனி 2018-ஐப் பார் என்று நாமே முழங்குகிற நாளாய் மே 8 அமைந்திட மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கிப் பயணித்திட, களத்தை நோக்கிப் பயணித்திட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.*


*_களத்தில் சந்திப்போம்!_*

*_கடலென சங்கமிப்போம்!_*

*_உளத்தில் உறுதிகொள்வோம்!_*

*_களத்தில் வெற்றிகொள்வோம்!_*

*_தடைகளை உடைப்போம்!_*

*_சரித்திரம் படைப்போம்_*


⚡தோழமையுடன்;

*தோழர்.ச.மயில்*

*மாநில பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*  


நமது பொதுச்செயலாளர் அவர்கள் STFI மாநாட்டிற்கு ஒரிசா சென்றுள்ளார், அங்கிருந்து நமது இயக்கத் தோழர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: