*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரின் அறிக்கை**நாள்:03.05.2018*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/03052018.html
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே*
*🙏வணக்கம்🙏*
*🌟இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) 7வது அகில இந்திய மாநாடு ஒடிசா மாநிலம் பூரி நகரில் மே 4,5,6 தேதிகளில் பேரெழுச்சியோடு நடைபெறுகிறது*
*🌟இந்தியா முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பல்வேறு மாநிலங்களின் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பூரி மண்ணிலே நடைபெறுகிறது*
*🌟இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 40 பிரதிநிதிகள்,5 பார்வையாளர்கள் உட்பட 45 பேர் தற்போது ஒடிசா சென்று கொண்டிருக்கிறார்கள்*
*🌟மாநாட்டின் பிரகடனம்"Education for progress with scientific temper&Protect teachers right with dignity"என்பதாகும்*
*🌟இம்மாநாட்டில் தேசத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள்,தொழிற்சங்கத் தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஒடிசா மாநில அமைச்சர்கள்,ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள்,நாடு முழுவதுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்*
*🌟அகில இந்திய அளவில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு உருவாக முழு முதற் காரணமாக இருந்த பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஆரம்ப வடிவமான CCSTO முதன்முதலில் சென்னையில்தான் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முழு முயற்சியில் உருவாக்கப்பட்டது*
*🌟இன்று இந்தியா முழுவதும் ஆலமரம்போல் பரந்து விரிந்திருக்கிற இக்கூட்டமைப்பு தேசத்தின் கல்வி நலனுக்கான களப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது*
*🌟தேச முன்னேற்றத்திற்கான களப்பணியின் ஒரு பகுதியே கல்விப்பணி என்ற உணர்வோடு,கல்விக்களத்தில் எழும் சவால்களை முற்போக்கு திசைவழியில் அறிவியல் மனப்பான்மையுடன் நுணுகி ஆராய்ந்து செயல்பட்டுவரும் கூட்டமைப்பே இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு*
*🌟இக்கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பெருமிதம் கொள்கிறது*
*🌟மாநாட்டின் வெற்றியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறது.மாநாடு மகத்தான வெற்றிபெற வாழ்த்துகிறது*
*🌟மே 8 ஜேக்டோ ஜியோவின் முறுகைப்போராட்டத்தை வெற்றிகரமாக்க நம் இயக்கத்திற்கேயுரிய தனித்தன்மையோடு கண்துஞ்சாது களப்பணியாற்றிட நம் பேரியக்கத் தோழர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*⚡தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment