Saturday 30 June 2018

*8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் பங்கேற்க தடை - இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தி மாவட்ட மாறுதல் வழங்கிட ஆவண செய்திட வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் மணு வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/8_75.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*

*⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்களும்,*


*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும்,*


*⚡மாநில பொருளாளர் தோழர். ஜோதி பாபு அவர்களும்,*


*⚡STFI ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்களும்,*


*⚡துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் அவர்களும்,*


*மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடம்  மனு வழங்கினார்கள்*


*மனுவில் கூறப்பட்டுள்ள செய்திகள்*



*🌟21.06.2018 ல் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில்,* 


1.கிருஷ்ணகிரி,

2.தர்மபுரி,

3.திருவண்ணாமலை,

4.விழுப்புரம்,

5.வேலூர்,

6.திருப்பூர்,

7.ஈரோடு,

8.சேலம்.


*ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.*


*🌟மேலும் பிற மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் அனைத்து மாவட்ட மாறுதலுக்கு உட்படுத்தப்படாத நிலையும் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மாவட்ட மாறுதலை எதிர்நோக்கி இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.*


*🌟இதனால் 10,15 ஆண்டுகளுக்கு மேலாக பிற மாவட்டங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழும் வாய்ப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இம்முடிவால் தமிழகம் முழுவதும் 2018-19 ஆம் கல்வியாண்டில் மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த பணிநிலையில் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.*


*🌟காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாணவர் நலன் கருதி உடனடியாக நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்ட இடைநிலை ஆசிரியர்களும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் உடனடியாக ஆணை வெளியிட்டு தமிழ்நாடு ஆசிரியர்களின் நலன் காத்திட எங்களது மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் கோருகிறோம்.*


*தோழமையுடன்;*


*_தோழர்.ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: