Saturday 30 June 2018

*பி.லிட் தகுதிபெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பி.லிட் உயர்கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்தும் உத்தரவு மற்றும் 8 வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் இதுவரை செய்யப்படாமை குறித்து ஆசிரியர்களின் நலன் கருதி மீண்டும் ஊக்க ஊதியம் வழங்கி உத்தரவிட வேண்டுதல் மற்றும் ஊக்க ஊதியத்தை திரும்பச் செலுத்தும் உத்தரவை ரத்து செய்திட வேண்டி மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்களிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/8_8.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*



*⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்களும்,*


*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும்,*


*⚡மாநில பொருளாளர் தோழர். ஜோதி பாபு அவர்களும்,*


*⚡STFI ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்களும்,*


*⚡துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் அவர்களும்,*



*🌟மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து  மனு வழங்கினார்கள்*



*🌟மேலும் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களையும் நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.*



*⚡மனு வழங்கிய போது கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்* 



*_மனுவில் கூறப்பட்டுள்ள செய்திகள்_*



*🌟பி.லிட் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.லிட் உயர்கல்விக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. அதை நிறுத்தி வைத்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டார். அது தொடர்பாக அரசுக்கு முறையீடு செய்த நிலையில் ஊக்க ஊதியம் வழங்க விதிகளில் இடமில்லை என அரசுக் கடிதம் வெளியிடப்பட்டது. அதைப் பயன்படுத்தி கீழ்நிலை அலுவலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவிட்டனர். அவ்வாறு திரும்பச் செலுத்தாதவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின்படி ஊதிய நிர்ணயம் செய்ய இன்றுவரை மறுத்து வருகின்றனர்.*



*🌟தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறையில் இனி வரும் காலங்களில் பி.லிட் தகுதியுடன் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களின் பி.எட் ஊக்க ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்து உத்தரவிட வழிகாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்க ஊதியம் பெற்று வருபவர்கள் தொடர்பாக எந்த உத்தரவும் பிரப்பிக்கப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக பெற்றுவந்த ஊக்க ஊதியத்தை திரும்பச் செலுத்த கீழ்நிலை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். கீழ்நிலை அலுவலர்களின் இச்செயல்பாடு இயக்குநரின் செயல்முறைக்கு முரணாக உள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.*


*🌟பெற்ற ஊக்க ஊதியத்தை திரும்ப செலுத்தாத நிலையில் கீழ்நிலை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு  8 வது ஊதியக்குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்ய மறுத்தும் வருகின்றனர். எனவே இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கி ஊதிய நிர்ணயம் செய்ய உத்தரவிடுமாறும், பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்த வற்புறுத்தும் நிலையை மாற்றிடுமாறும் 40 ஆண்டுகாலமாய் பெற்று வந்த ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கி ஆணையிடுமாறும் மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் கோருகிறோம்.*   



*தோழமையுடன்;*


*_தோழர்.ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: