🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_0.html
*🌟தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பல மாநிலங்களில் அரசு பணிகளில் நடந்த முறைகேடுகள் பல வெளிச்சத்திற்கு வந்துள்ளன.*
*🌟இதனை இன்னும் சிலர் சரிவர பயன்படுத்துவதில்லை என்ற உண்மை ஒருபக்கம் இருந்தாலும், சிலர் இதனை ஒரு வாய்ப்பாக கருதி நல்ல விஷயங்களை வெளிக் கொணர்ந்தவண்ணம் உள்ளனர்.*
*🌟திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் பிரடெரிக் ஏங்கல்ஸ், இவர் கடந்த 2007 ல் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து துறை, மின்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம், கல்வித்துறை, உயர்நீதிமன்றம், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையம் என பல்வேறு துறைகளில் தகவல்களைக் கேட்டு புகுந்து விளையாடி வருகிறார்.*
*🌟அவர் இதுவரை கேட்ட கேள்விகளுக்கான பதிலளித்து 7 ஆயிரத்துக்கும் மேலான கடிதங்கள் வந்துள்ளன. அரசு தந்த பதில்களின் அடிப்படையில் மக்களுக்கு பயன்தரும் தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.*
*_இது குறித்து அவர் கூறியதாவது:_*
*🌟இச்சட்டம் கொண்டுவந்த பின், நான் 2007 முதல் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தேன், இதுவரை 7400 கடிதங்களுக்கு பதில் கிடைத்துள்ளது. அனைத்தும் முறையான, தேவையான கேள்விகளை மக்கள் நலன் கருதியே கேட்டேன். 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், ஓய்வு பெற்றவர்களின் நிலை, ஓய்வூதிய விபரம் ஆகியவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தான் வெட்ட வெளிச்சமானது. இது போன்ற விளக்கமான கேள்விகள் கேட்டதால்தான், பழநி முதல் எரியோடு வழியாக திருச்சி வரை செல்லும் அரசு பேருந்து வசதியும் கிடைத்தது, என்றார்.*
*🌟தகவல் அறியும் உரிமைச் சட்டம், வினா தொடுப்பது பற்றி அறிய வேண்டுமா, இவரை தொடர்பு கொள்ளலாம். தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9629927400.*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
*தோழர்.பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட குணம் தோழருக்கும் இருப்பதை குறிப்பிட்டு பெருமிதம் அடைகிறோம். தோழர் அவர்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துகளையும், வணக்கத்தையும் _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment