Wednesday, 13 June 2018

*ஜாக்டோ ஜியோ மூன்றாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் - கைது நடவடிக்கை - மாவட்ட தலைநகரில் மாலை நேர எழுச்சி ஆர்பாட்டம் - செய்தி துளிகள் மற்றும் புகைப்படக் காட்சிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_13.html


*🌟ஜாக்டோ ஜியோவில் உள்ள 114 சங்கங்களின் மாநில நிர்வாகிகள் சென்னையில் 11.06.2018 முதல் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.*


*🌟அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாலை நேர ஆர்பாட்டம் நடைபெற்று வந்தது.*


*🌟மூன்றாம் நாளான இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து தங்களுடைய ஆதரவினைத்தெரிவித்தார்கள்.*


*🌟இன்று TAMS மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன் மயக்கமுற்று மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் பத்துக்கு மேற்பட்ட மாநில நிர்வாகிகள் மயக்கமடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்கள்.*


*🌟மூன்று நாட்களாக (அறவழிப்போராட்டம்) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டும் இப்பொழுது ஆளுகின்ற எடப்பாடி அரசு போராட்டக்காரர்களை அழைத்து பேசாமலும், கண்டுகொள்ளாமலும் இருந்தது.*


*🌟இன்று பிற்பகல் உண்ணாவிரதப் பந்தலிலேயே ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.*


*🌟உண்ணாவிரதம் இருந்து வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை சந்திக்காத முதல்வரை பேரணியாக சென்று தலைமைச்செயலகத்தில் சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.*    


*🌟அதன்படி மாலை 4.30 மணிக்கு மேல் பேரியாக புறப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலிசார் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டார்கள்.*


*🌟அபொழுது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் தோழர்.மோசஸ் அவர்களை காவல்துறை தள்ளிவிட்டதில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்*


*🌟இரண்டு நாட்களாக இல்லாமல் மூன்றாம் நாளான இன்று காலையிலேயே காவலர்கள் அதிக அளவில் உண்ணாவிரதப் பந்தல் அருகில் குவிக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.*


*🌟கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராடத்தை கைவிடப் போவதில்லை என்று ஜாக்டோ ஜியோ உறுதியாக உள்ளது.*


*🌟ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகளை காவல் துறை கைது நடவடிக்கை மேற்கொண்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் தோழர் மோசஸ் ஆஞ்சியோ இருதய சிகிச்சை மேற்கொண்டு ஒருவருட காலம் கூட ஆகவில்லை. காவல்துறையின் தள்ளுமுள்ளுவில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறுவது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வேதனையினையும் எழுசியையும் ஏற்படுத்தியுள்ளது.*


*🌟காவல்துறையை கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள தோழர்கள் கொதித்து எழுந்துள்ளார்கள் ஜாக்டோ ஜியோ உத்தரவிற்காக காத்துள்ளார்கள், உத்தரவிட்டால் உடனே போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளார்கள்.*


*🌟ஜாக்டோ-ஜியோ தலைவர்களை சென்னை காவல்துறை ஆணையர் அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்.* 


*🌟ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் "எங்களைக் கூட்டி வந்திருக்கிறீர்கள்.  எங்களைக் கைது செய்யுங்கள்.  நாங்கள் எதிர்கொள்கிறோம்" என்று கூறி வாதம் செய்து வருவதாகவும் தகவல்.*


*🌟மூன்றாம் நாள் போராட்டக்களம், தலைவர்கள் ஆதரவு, தோழர்கள் மயக்கமடைந்து சிகிச்சை மற்றும் கைது நடவடிக்கை இவற்றின் புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து காணுங்கள் தோழர்களே!*

https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_13.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

















































No comments: