Friday, 8 June 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_30.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,


*⚡மாநிலத் தலைவர் _தோழர்.மணிமேகலை_ அவர்களும்,*


*⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களும்,*


*⚡STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர். மோசஸ்_ அவர்களும்,*



*🌟இன்று (08.06.2018) வெள்ளிக்கிழமை DPI வளாகத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனு அளித்தனர்.*  


*🌟கோரிக்கைகள்:*


*⚡2018-19 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஒளிவு மறைவற்ற வகையிலும், விதிகளுக்கு உட்பட்டு நடத்திட வேண்டியும்,*

*⚡கடந்த மாறுதலில் 01.06.2017 அன்று பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என்ற அறிவிப்பு ஆசிரியர்களை பெறும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது, அவர்களுக்கும் தற்பொழுது நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும்,*

*⚡தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாக (சென்ற கலந்தாய்வின் மூலம் 01.06.2017 அன்று பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்) தற்பொழுது நடைபெற இருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டியும்,* 

*⚡திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மலைச் சுழற்சி முறையினை கொண்டுவர வேண்டியும்,*

*⚡மேலும் ஆசிரியர்கள் சம்மந்தமான பல்வேறு கோரிக்கை குறித்தும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.*



*🌟தோழமையுடன்;*

*_தோழர். ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: