*புதிய பாடத்திட்டத்தில் Digital முறை - Digital Content & Digital Assessment - MHRD Secretary Visit*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/t-n-p-t-f-httpstnptfayan_26.html
*🌟ICT ஆசிரியர்கள், பிற ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் 11 மாதகால இடைவிடாத உழைப்பினால் 1,6,9,11 வகுப்புகளுக்கான பாடபுத்தகங்களில் உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி சாதனையின் காரணமாக பிறந்தது தான் மாநில அளவிலான ( Digital Content Cell & Assessment Cell )*
*🌟இது போன்ற ஒரு கட்டமைப்பு தேவை என்பது நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல ICT -ல் முனைப்புடன் செயல்படும் ஒவ்வொரு ஆசிரியரின் கனவு...*
*🌟இந்த உட்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடும் பணியை கல்வித்துறையானது மாநில திட்ட இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டது.*
*🌟இது போன்ற கட்டமைப்பு மாநிலத்தில் மட்டுமல்ல மண்டல மாவட்ட அளவில் ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்ச்சி மற்றும் டிஜிட்டல் பாட தயாரிப்புகள் மேற்க்கொள்ள தேவை என்பதையும் தயாரித்ததை பயன்படுத்த பள்ளி வகுப்பறையில் தேவையான உட்கட்மைப்புகள் பற்றி தன்முனைபுடன் ICT சாதனங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது...*
*🌟இந்த பரிந்துரைகளை பெற்ற மத்திய அரசின் MHRD, நமது மாநில செயல்பாடுகளை பார்வையிட கடந்த June 21 அன்று MHRD சிறப்பு செயலர் வருகை புரிந்து புதிய பாடபுத்தகங்களில் நாம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் பணிகளை ஆய்வு செய்தார் உடன் பள்ளிக் கல்வி செயளலர், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் உடன் இருந்தனர்...*
*🌟நமது மாநிலத்தின் செயல்பாடுகளையும் இவை அனைத்தையும் உருவாக்கியது ஆசிரியர்களின் பெருமுயற்சியில் தான் என கூறிய போது வியந்து பாராட்டினார் மனிதவள சிறப்பு செயலர் ...*
*🌟மேலும் இந்த செயல்பாடுகளை கொண்டு மாணவர்களின் திறன்களில் ஏற்படும் இடைவெளியை சரி செய்யும் திட்டமிடல் இருந்தால் தான் இந்த பணி முழுமை பெறும் என்று அறிவுரை வழங்கினார்.*
*🌟மேலும் இந்த பணிகளில் QR Code fixing, mapping, uploading பணிகளை நண்பர்கள் ஜகன்நாதன், ஜகன்,ராய்யும்...*
*🌟Digital content பொறுத்தமட்டில்... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில்... 1 -ம் வகுப்பு நண்பர் தினேஷ் மற்றும் ஆசிரிய குழுவினர், 6-ம் வகுப்பு நண்பர் ஜான் மற்றும் ஆசிரிய குழுவினர், 9 -ம் வகுப்பு நண்பர் திலிப் மற்றும் ஆசிரிய குழுவினர், 11-ம் வகுப்பு மெக்டலின் மற்றும் ஆசிரிய குழுவினர் தயாரிப்பில் ஈடுபட்டனர்...*
*🌟Digital Assessment பொருத்தமட்டில், என்னுடைய ஒருங்கிணைப்பில் 1- ம் வகுப்பு திரு. பிரபுராஜா மற்றும் ஆசிரியர்கள், 6-ம் வகுப்பு திருமதி.செந்தில்குமாரி மற்றும் ஆசிரியர்கள், 9 - ம் வகுப்பு திரு. அசோக் மற்றும் ஆசிரியர்கள், 11-ம் வகுப்பு திருமதி.ஹமா மற்றும் ஆசிரியர்கள் தயாரித்தனர்...*
*🌟Video Lesson... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில், அண்ணன் அமலன் ஜெரூம் மற்றும் குழுவினர் தயாரிப்பு பணியில் உள்ளனர்...*
*🌟இந்த அனைத்து வளங்களையும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தும் DIKSHA( TNTP ) தளத்தின் Admin என்ற வகையில் product development, bug rising, data analysis and validation பணிகளை CSF, TFI மற்றும் Ekstep போன்ற NGO நிறுவனங்கள் துணையுடன் செய்து வருகிறோம்.*
*🌟தயாரித்த வளங்களை வகுப்பறையில் பயன்படுத்துவதற்க்கான பயிற்சியினை... பயிற்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்பழ்கன் மற்றும் ஆசிரிய குழுவினர் வழங்கிவருகின்றனர்.*
*🌟இப்பணியினை திறம்பட செய்து முடித்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் எங்களுக்கு வாய்ப்பளித்த மதிப்புமிகு.பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர், மதிப்புமிகு.பள்ளிக்கல்வி செயலர், மதிப்புமிகு.SPD sir, மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.இணை இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அத்துணை அலுவலர்களுக்கும் எங்கள் Digital Contant, Digital Assessment குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*🌟ஊர் கூடி தேர் இழுத்தோம்... அதனால் புதுமைகள் பலவுடன் புதிய புத்தகம் உங்கள் கையில் ... பாருங்கள்... பகிருங்கள்... உங்கள் கருத்துக்களை... மெருகேற்றுவோம் அடுத்த பருவங்களில்...*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment