🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_10.html
*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் கடந்த (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை மாநில அலுவலக கட்டிட கூட்ட அரங்கில் மாநில தலைவர் தோழர் மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*_கூட்ட முடிவுகள்:_*
*⚡தீர்மானம் 1:*
*இந்திய மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான தோழர். அபிமன்யு அவர்களின் மறைவிற்கு இம்மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⚡தீர்மானம் 2:*
*தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாடு" செப்டம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடத்துவது எனவும் அம்மாநாட்டில் தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சிறைநிரப்பும் வகையிலான வலிமையான களப்போராட்டத்தை அறிவிப்பதெனவும் இம்மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*⚡தீர்மானம் 3:*
*ஒற்றைக் கோரிக்கை மாநாடான இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாட்டை மிகுந்த வலிமையுடன் நடத்துவதற்கு ஏதுவாக 05.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு மாநகரில் வட்டார செயலாளர்கள் உட்பட மாநில பொதுகுழு உறுப்பினர்கள் அடங்கிய விரிவடைந்த மாநில பொதுக்குழு நடத்துவது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.*
*06.08.2018 முதல் 15.08.2018 முடிய தமிழகம் முழுவதும் ஒற்றைக் கோரிக்கை மாநாட்டை வலியுறுத்தி ஆசிரியர்கள் மத்தியில் பிரசார இயக்கம் நடத்துவது,*
*18,19,25,26/08/2018 & 01,02/09/2018 ஆகிய நாட்களில் பொருத்தமான தேதியில் மாவட்டங்களில் மாவட்ட அளவில் ஆயத்த மாநாட்டினை நடத்துவது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.*
*⚡தீர்மானம் 4:*
*2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் 8 மாவட்டங்களைச் சார்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் தடை விதிக்கப்பட்டது, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற இரண்டாம்கட்ட கலந்தாய்வினை நடத்திடக்கோரி 16.07.2018 அன்று மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்திட இம் மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*⚡தீர்மானம் 5:*
*அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாட்டு நிதிப் பங்களிப்பை அனைத்து மாவட்ட கிளைகளும் 31.07.2018 க்குள் நிலுவையின்றி செலுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*
*⚡தீர்மானம் 6:*
*2017-18 உறுப்பினர் சந்தா மாநில பங்கீடு தொகையினை மாவட்ட மையம் 31.07.2018 க்குள் நிலுவையின்றி செலுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*
*⚡தீர்மானம் 7:*
*2018 ஆம் ஆண்டுக்குரிய நாட்காட்டி, நாட்குறிப்பு மற்றும் அரசாணைப்புத்தகம் ஆகியவற்றுக்கான நிலுவைத் தொகையினை 31.07.2018 க்குள் செலுத்தி மாவட்ட மையம் கணக்கு முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.*
*⚡தீர்மானம் 8:*
*2018-19 ஆம் ஆண்டு இயக்க உறுப்பினர் சேர்க்கையை இயக்க நாளான 02.08.2018 க்குள் நிறைவு செய்து அனைத்து மாவட்ட கிளைகளும் பங்குத்தொகையுடன் மாநில மையத்தில் ஒப்படைத்திட இம் மாநில செயற்குழு தீர்மானிக்கிறது.*
*⚡தீர்மானம் 9:*
*திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது, மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் இம்மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*⚡தீர்மானம் 10:*
*சத்துணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையினை நாள்தோறும் குறுஞ்செய்தி SMS அனுப்புவது தேவையற்றது எனவும் இப்பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தமிழக அரசை இம் மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*⚡தீர்மானம் 11:*
*தொடக்கக்கல்வி துறையின் நலன் கருதி முன்பு போல தொடக்கக்கல்வி துறை தனி நிர்வாக அமைப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம் மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*⚡தீர்மானம் 12:*
*10 க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஆரம்பப் பள்ளிகளை பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் பள்ளிகளை மூடும் எண்ணத்தினைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை இம் மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*⚡தீர்மானம் 13:*
*ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2018-19 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்திட இம் மாநில செயற்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.*
*⚡தீர்மானம் 14:*
*ஆதிதிராவிடர் நலத்துறை ஓராசிரியர் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்.*
*⚡தீர்மானம் 15:*
*தமிழக அரசு தரமான வகையில் விலையில்லாச் சீருடைகள் வழங்கிட வலியுறுத்தல்.*
*⚡தீர்மானம் 16:*
*2018-19 கல்வியாண்டில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை பாடபுத்தகங்கள் மற்றும் ஒருசில பாடகுறிப்பேடுகள் சில பள்ளிகளுக்கு வழங்காத நிலை நீடித்து வருகிறது, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*
*⚡தீர்மானம் 17:*
*கடந்த ஆண்டிற்கான விலையில்லா மடிக்கணினி & மிதிவண்டிகளை விரைந்து வழங்கிட வலியுறுத்தல்.*
*⚡தீர்மானம் 18:*
*4 மாதகாலமாக பள்ளிகளுக்கான மின்கட்டணம் செலுத்தாத நிலையில் தமிழக அரசு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்.*
*⚡தீர்மானம் 19:*
*ஊதியக்குழுவிற்குப் பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்புப்படி வழங்காததைச் சீர்செய்ய வலியுறுத்தல்.*
*⚡தீர்மானம் 20:*
*பின்னடைவு பணியிடங்களில் பணியேற்றோர் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வை அனுமதிக்க வலியுறுத்தல்.*
*விரிவான தீர்மானங்கள் தொடர்ந்து கீழே உள்ள Link ல் சென்று கண்டுகளியுங்கள் தோழர்களே!*
https://drive.google.com/file/d/1OxHrLJWFRKeQVaTbcEJgIA_sViTzU2fE/view?usp=drivesdk
*தோழமையுடன்;*
*_தோழர். ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*





No comments:
Post a Comment