🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_11.html
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை*
*🌟தமிழ்நாடு முழுவதும் கடந்த 03.07.2018 முதல் 26 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் நடத்தி வரும் வீரஞ்செறிந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⚡ஊராட்சி எழுத்தர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.*
*⚡தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்து விட்ட அரசாணை 56 ஐ ரத்து செய்திட வேண்டும்.*
*⚡ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.*
*⚡விடுமுறை தினங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதைக் கைவிட வேண்டும்.*
*⚡என்பன உள்ளிட்ட நியாயமான 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டம் முழு வெற்றி பெற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது தோழமை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*🌟தமிழ்நாட்டில் நடைபெறும் எந்தவொரு ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்குவதில் மட்டுமே குறியாக இருக்கும் தமிழக அரசு, போராட்டக்காரர்களை அழைத்துப் பேசுவதில் தாமதம் காட்டுவது பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.*
*🌟பல்வேறு காலகட்டங்களில் போராட்டக்காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைக் கூட தமிழக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றியதே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் இன்றைய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காரணமாகும்.*
*🌟எனவே தமிழக அரசு உடனடியாக போராட்டக்களத்தில் உறுதியுடன் நின்று போராடும் சங்கத் தலைவர்களை அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.*
*🌟அவ்வாறு முன்வரவில்லை என்றால் தொழிற்சங்க இலக்கணத்தோடு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதையும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது.*
*தோழமையுடன்;*
*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment