Thursday 26 July 2018

*இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்திப்பு செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_26.html


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக,*

*⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களும்,*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர். ச.மோசஸ்_ அவர்களும்,*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்களும்,*

*மாநில துணைச் செயலாளர் _தோழர். சித்ரா_ அவர்களும்,*


*_மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்_ அவர்களை இன்று 26.07.2018 வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து  தீர்வுகான வலியுறுத்தப்பட்டது.*


*⭐2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற 8 மாவட்டங்களில் மட்டும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது, இதனால் அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். எனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்திட உத்தரவிடுமாறு வலியுத்தப்பட்டது.*


*⭐2018-19 ஆம் கல்வியாண்டில் மாறுதல் கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டும் தற்பொழுது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு 1.1.2018 ன் படி  தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது.*


*⭐முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின் அனுமதி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.*


*2018-19 ம் ஆண்டின் பள்ளி வேலை நாள் அட்டவணை தொடக்கக்கல்வி துறைக்கென தனியாக வெளியிட வலியுறுத்தப்பட்டது, அதற்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வி வெளியிட்ட பள்ளி வேலை நாள் நாட்காட்டி நமக்கும் பொருந்தும் எனவே அதனையே பயன்படுத்திக்கொள்ளுமாறும் தனியாக வெளியிட தேவையில்லை என்று கூறினார்.*



*⭐பி.லிட், பி.எட், பயின்று நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களிடம் பதவி உயர்வு செல்லாது எனவும் அதற்காக பெறப்பட்ட ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவினை திரும்பப்பெற வேண்டும் என்று நமது அமைப்பின் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பதவி உயர்வுக்காக பெறப்பட்ட ஊக்க ஊதியத் தொகையினை திரும்ப செலுத்த தேவையில்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் கூறினார் மேலும் இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.*


*⭐கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கண்ணியாகுமரி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகள் தொடர்பாகவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம்  பேசப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது*


*மேலும் தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பில் காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.*



*📧தோழமையுடன்;*

*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: