Thursday, 26 July 2018

*கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக வடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_85.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் வடலூர் கல்வி மாவட்டம், புவனகிரி ஒன்றியம் மேல்அனுவம்பட்டு தலைமை ஆசிரியர் C.பத்மாவதி அவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி காத்திருப்புப் போராட்டம் நேற்று (25.07.2018) மாலை துவங்கியது*


*⭐இரவு 10.00 மணிக்கு மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் இரவு முழுவதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.*


*⭐இன்று 26.07.2018 பிற்பகல் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் 03.08.2018 அன்று வரை அவகாசம் கேட்டுக்கொண்டு அதற்குள் உங்கள் கோரிக்கைக்கு உண்டான தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக கொடுத்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: