Sunday, 1 July 2018

*பள்ளிக்கு ஒரு சுகாதார பணியாளர் கழிப்பறை சுத்தத்தில் சிக்கல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_54.html


*🌟மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரப் பணியாளர் நியமிக்காததால் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் சிரமம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.*


*🌟கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊரகவளர்ச்சித்துறை மூலம் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடக்கப்பள்ளிகளுக்கு சுகாதாரப் பணியாளர் ஊதியம் 750 ரூபாய், தூய்மை செய்யும் பொருட்களுக்கு 300 ரூபாய் என மாதந்தோறும் 1050 வழங்கப்படும்.*


*🌟நடுநிலைப் பள்ளிகளுக்கு ஊதியமாக 1000 ரூபாய், பொருட்களுக்கு 500 ரூபாய் என மாதந்தோறும் 1500 ரூபாய், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியமாக 1500 ரூபாய் பொருட்களுக்கு 750 ரூபாய் என மாதந்தோறும் 2250 ரூபாயும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியமாக 2000 ரூபாய் பொருட்கள் வாங்க 1000 ரூபாய் என மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும்.*


*🌟மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்காமல் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.*


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:_*


*🌟மாணவர்களுக்கு ஏற்ப கழிப்பறைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அவற்றை ஒருவர் சுத்தம் செய்வது சிரமம். அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். என்று கூறினார்.*

*தகவல் பகிர்வு;*

*_தோழர்.முத்துப்பாண்டியன்,_*

*மாவட்டச் செயலாளர்,*

*சிவகங்கை மாவட்டம்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: