Friday, 24 August 2018

*ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்டக்குழு கூட்டம் முடிவுகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_24.html


*ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள்*

*_🔶திரு.வெங்கடேசன்,_* 

*_🔶திரு. தாஸ்,_* 

*_🔶திரு. கே.பி.ஒ.சுரேஷ்_*

*⭐அவர்களின் தலைமையில் மதுரை மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது.* 


*இக்கூட்டத்தில்*

*🔶திரு.அன்பரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர். சுப்பிரமணியன்,_*

*🔶மாநில நிதிக்காப்பளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத்தலைவருமான _தோழர் ச.மோசஸ்_*

*உள்ளிட்ட மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*


*_🔅இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன._*


*⚡1) மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  முன்னாள். மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களுக்கும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.*      


      

*⚡2) கேரளா வெள்ளநிவாரண நிதியாக  அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசு பிடித்தம் செய்து கேரளா அரசுக்கு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.*


*⚡3) தமிழக முதல்வர் பேச்சினைக்கண்டித்து 30.8.18 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.*


*⚡4) பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவது.  அதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.*

     

*⚡5) 13.10.18 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று  ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது.* 


*⚡6) திருவண்ணாமலை CEO ஜெயக்குமார் , தற்காலிக பணிநீக்கம் செய்துள்ள 5 ஆசிரியர்கள் தொடர்பாக 27.8.18 அன்று பள்ளிக்கலவி இயக்குநரை சந்திப்பது அதற்குள் பிரச்சனைக்கு தீர்வு எட்டாவிடில் அன்றய தினம் போராட்டத்தை அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.*      


*⭐மேற்கண்ட முடிவுகளை அமுல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.* 

*தோழமையுடன்;*

*_ஜாக்டோ-ஜியோ_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: