Monday, 6 August 2018

*தமிழகத்தில் நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்🚫*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_29.html



*⭐மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை.*


*⭐மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி, நாடு முழுவதும் மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு✊ தெரிவித்து வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்🚫 போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.*


*⭐அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள், 🚗கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது📢. வேலைநிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபடுகின்றன.*


*⭐அரசுப் 🚌பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: