*முத்தமிழ் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவிற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் இரங்கல் செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_7.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*🌟தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற தொண்டாற்றிய மாபெரும் மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*
*🌟தன்னுடைய காந்தக்குரலால்ää இலக்கியத்திறனால், இணையற்ற பேச்சாற்றலால், நிகரற்ற நிர்வாகத்திறனால் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.*
*🌟ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டுவந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லாத்தரப்பு மக்களையும் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.*
*🌟முன்முதலாக தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசின் 5வது ஊதியக்குழுவின் மூலமாக 01.06.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொகுப்பூதிய ஒழிப்பு மாநாட்டை நடத்திய போது அன்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அம்மாநாட்டிற்கு திரு.ஆற்காடு வீராச்சாமி அவர்களை அனுப்பி வைத்து வாக்குறுதி அளித்ததோடு தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தவர். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கி ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழியேற்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.*
*🌟அடுத்துவந்த அ.தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனம் என்ற உரிமை பறிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் காமராஜர் சிலையருகே 01.10.1995 அன்று பத்தாயிரம் ஆசிரியர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அன்று எதிர்க்கட்சிதலைவராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் 01.10.1995 முரசொலி பத்திரிக்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்டம் ‘ சமூக நீதிக்கான போராட்டம்” என்று வர்ணித்து எழுதியதை மறக்க முடியாது.*
*🌟பொதுவாழ்க்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணத்துடன் செயலாற்றியவர். போர்க்குணத்தையும், போராட்டக்களத்தையும் மதித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அரசியல்; தொண்டுடன், சமூகத் தொண்டுடன், பெருந்தமிழ்த்தொண்டையும் ஆற்றிய தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.*
*🌟அவரது உடல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் எழுதிய சாகாவரம் பெற்ற இலக்கியங்களான நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ், கவிதை மழை போன்றவற்றில்; அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். உலகெங்கும் வாழும் தமிழ்நெஞ்சங்களை உலுக்கிவிட்ட டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment