Wednesday, 8 August 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளையின் அழைப்பிதழ்....*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_8.html



*_💐இருபெரும் விழா அழைப்பிதழ்...💐_*


*⭐கரூர் மாவட்ட கிளைக்கு புதிய அலுவலகம் திறப்பு விழா கரூர் நாரதகான சபா அருகில் உள்ள தமிழ்நாடு அரசூழியர் சங்க கட்டிடத்தில் வருகின்ற 19.8.18 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. புதிய அலுவலகத்தை STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர் மோசஸ் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ள கரூர் மாவட்ட கிளையின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.*


*⭐மேலும் அதே நாளில் (19.8.18) புதிய அலுவலகம் திறப்பிற்கு பின் தமிழக அரசால் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு பிரகடன மாநாட்டிற்கு கரூர் மாவட்ட ஆயத்த கூட்டம் நடைபெறவுள்ளது.*


*⭐ஆதலால் கரூர் மாவட்ட தோழர்கள் அனைவரும் மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் முழுமையாக கலந்து கொள்ளும் பொருட்டு அன்றைய தினம் சரியாக காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பணிகளை திட்டமிடுதல் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.*


*⭐வட்டார நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வட்டாரங்களில் இருந்து அதிகப்படியான 100% ஆசிரியர்களை கலந்து கொள்ளச் செய்வதற்கான அனைத்து பணிகளையும் திட்டமிட்டு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.*


*⭐இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுக்கும் வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒரு போதும் ஓயாது...*


*_இடைநிலை ஆசிரியர்களே..._*


*⚡அனைத்து வகை ஆசிரியர்களின் ஒளி விளக்காய் திகழக்கூடிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பதாகையின் கீழ் அணி திரள்வீர்...*

*ஆர்பரித்து வாரீர்..*



*இவண்,*

*பெ.காளிதாஸ், மாவட்ட தலைவர்.*

*ஜ.ஜெயராஜ், மாவட்ட செயலாளர்.*

*பெ.கனகராஜ், மாவட்ட பொருளாளர்.*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*கரூர் மாவட்டம் (கிளை).*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: