Friday, 17 August 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை - கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_48.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 9 நாள் : 16.08.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐கேரள மாநிலத்தில் கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கேரள மாநில மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.*


*⭐50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கேரளத்தில் பெய்துவரும் பெரும் மழை பலத்த உயிர்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*


*⭐இதனால் கேரள மக்களில் பலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடிழந்து, உடமைகளை இழந்து தத்தளித்து வருகின்றனர்.*


*⭐இவ்வாறு இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடந்த காலங்களில் தனது மிக முக்கியக் கடமையாகக் கருதி களத்தில் இறங்கிச் செயலாற்றியுள்ளது.*


*⭐அதே வழியில் தற்போது துயரத்தில் நிற்கும் கேரள மக்களுக்கு உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் முடிவெடுத்துள்ளது.*


*⭐அதன்படி வட்டார நகரக்கிளைகள் தங்களது உறுப்பினர்களிடம் உதவி நிதி பெற்று மாவட்டக்கிளைகளின் வழியாக மாநில அமைப்பில் செலுத்திட மாநில மையம் வேண்டுகிறது.*


*⭐ஒவ்வொரு மாவட்டக்கிளையும் குறைந்தபட்சம் ரூ.25000-(ரூபாய் இருபத்தைந்தாயிரம்) நிதி உதவி அளித்திடவும் கேரள மக்களின் துயர்துடைக்கும் இப்பணியில் விரைந்து செயலாற்ற மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளை மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: