Friday, 17 August 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தும் மாநில அளவிலான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் ஆயத்த மாநாட்டிற்கு தோழர்கள் அனைவரும் எழுச்சியோடு கலந்து கொண்டு மாநாடு வெற்றிபெறச் செய்ய வேண்டும் - பொதுச்செயலாளர் அறிவிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_17.html


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தும் மாநில அளவிலான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு பேரன்புமிக்க  ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்._*



*⭐தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்காக நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய தியாகங்கள் எண்ணிலடங்கா. 44 ஆண்டுகால கடும் போராட்டக்களங்களில் அரசின் கொடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு அவர்கள் சந்தித்த வேதனைகளும், சோதனைகளும் கணக்கிலடங்கா. இந்த சாதனைச் சரித்திரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பங்கு முதன்மையானது;மகத்தானது.*



*⭐இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம் பெற்றுவந்த தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு அகில இந்தியச் சராசரி ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேக்டீ பேரமைப்பு உருவாவதற்கு காரணமாக அமைந்த இயக்கமும்ää ஜேக்டீ போராட்டக்களத்தில் உருக்குப்போன்ற உறுதியுடன் இறுதிவரை உறுதியோடு நின்ற இயக்கமும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதான்.*


*⭐தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்திலேயே முதன் முதலாக 1988 மார்ச் 5,6 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


*⭐அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டின் ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் போராட்ட வரலாற்றில் தியாகம் தோய்ந்த, வீரஞ்செறிந்த வரலாற்றைப் படைத்திட்ட ஜேக்டீ - அரசு ஊழியர் சங்கங்களின் பேரமைப்பு 1988-ல் உருவாவதற்கு முழுமுதற்காரணமாக அமைந்த பேரியக்கமும், அப்போராட்டத்தின் வாயிலாக 01.06.1988 முதல் தமிழ்நாட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் முழுமுதற்காரணமாக விளங்கிய இயக்கமும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதான்.*


*⭐ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்துக் கூட்டுப் போராட்டங்களிலும் பங்கு கொண்ட, அப்போராட்டக்களங்களில் இணையற்ற உறுதியோடு இறுதிவரை பங்கேற்ற ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது வரலாறு.*


*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தனிச்சங்க நடவடிக்கையாக வேறெந்த இயக்கத்தையும்விட அதிகமான போராட்டக்களங்களைக் கண்ட ஒரே இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதான்.*


*⭐இன்று தமிழ்நாட்டின் இடைநிலை ஆசிரியர்கள் மாநில அரசின் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.* 



*⭐தமிழகத்தில் பணியாற்றும் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள்ää ஆசிரியர்களில் கடந்த இரண்டு ஊதியக்குழுக்களிலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள்தான்.*


*⭐ஊதியக்கட்டையே மாற்றியும், ஊதிய அட்டவனையில் நிலை இறக்கியும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட ஒரே பிரிவினர் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள்தான்.*


*⭐இந்தக் கொடுமையை எதிர்த்து 2009ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து எவ்வித சமரசமுமின்றி களத்தில் நின்று போரடிக் கொண்டிருக்கும் இயக்கம், எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் களத்தைவிட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 


*⭐தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்காக கடந்த 9 ஆண்டுகாலமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளவிற்கு தனிச்சங்கப் போராட்டங்களிலும், கூட்டுப்போராட்டங்களிலும் ஈடுபட்ட வேறொரு இயக்கத்தைக் காட்ட இயலாது.*


*⭐தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்க இதுவரை நடந்த கூட்டுப்போராட்டங்கள் இன்றுவரை வெற்றி பெறாததற்குக் காரணம், மிக முக்கியக் காலகட்டங்களில் போராட்டக்களத்திலிருந்து சந்தர்ப்பவாதத் தன்மையோடு வெளியேறிய சில துரோகச் சங்கங்களின் செயல்பாடேயாகும்.*


*⭐1985 ஜேக்டீ போராட்டத்திலிருந்து இன்றைய ஜேக்டோ ஜியோ போராட்டம் வரை கூட்டுப்போராட்டங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு துரோகமிழைத்த சங்கங்கள் எவையெவை என்ற வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*⭐அத்தகு வரலாற்றை மறைத்து தங்களைத் தியாகிகளாக உருவகப்படுத்திக் கொள்ளும் சில போலித் தலைமைகளின் சுயநலத்தன்மையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆசிரியர் நலன் காக்கும் உண்மையான இயக்கம் எது என்ற வரலாற்று உண்மை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினத்திற்குத் தெரியும்.*


*⭐இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்காக ஜேக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்து இன்றுவரை போரடிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் ஜேக்டோ ஜியோவின் போராட்ட நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்.*


*⭐கூட்டுப்போராட்டங்களில் பெரும்பான்மை முடிவிற்குக் கட்டுப்படுவது என்ற  ஜனநாயக நெறிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய தவிர்க்க இயலாத களச்சூழலில் ஜேக்டோ ஜியோ நடவடிக்கைகளை உறுதியுடன் முன்னெடுக்கும்.*


*⭐அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, நம் இயக்கத் தோழர்களின் உணர்வுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டும், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் கொந்தளிப்பான மனநிலையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு முடிவு கட்டுகிற போராட்டத்தை தனிச்சங்க நடவடிக்கையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.*


*⭐இடைநிலை ஆசிரியர் என்ற ஒரே பணிக்கு 3 வகையான ஊதியத்தை வழங்கி வேறு எங்கும் நடத்திராத அநீதியை இழைத்து, 18 ஆண்டுகளாகப் பெற்றுவந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைப் பறித்து புதியதாக நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கே மாதந்தோறும் 17000 ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, இடைநிலை ஆசிரியர்களைக் கடைநிலை ஊழியர்கள் நிலைக்குக் கொண்டு சென்று மாபாதகம் புரிந்துள்ள தமிழக அரசின் நியாயமற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து 1.1.2006 முதல் பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 1.1.2006 முதல் கணக்கிட்டு 1.1.2016 முதல் புதிய ஊதிய நிர்ணயம் செய்திடக்கோரியும்,*


*⭐26.09.2018 அன்று சென்னையில் 20000 ஆசிரியர்கள் பங்கேற்கும் _‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு”_ என்ற ஒற்றைக் கோரிக்கை மாநாட்டை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது.*


*⭐அம்மாநாட்டில் இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்டெடுக்கும் வலிமையான அடுத்தகட்டப் போராட்டக்களம் உருவாக்கப்படும்.*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற அக்கினிக்குஞ்சு பற்றவைக்கும் இப்போராட்ட பெருநெருப்பு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டெரிக்கும்.*


*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னெடுத்த களப்போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. அவ்வரலாற்றை மீண்டும் படைப்போம்.*


*⭐தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினமே மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் மாவட்டப் போராட்ட ஆயத்த மாநாடுகளிலும், 26.09.2018 அன்று சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டிலும் அணி அணியாய், அலை அலையாய் கலந்து கொள்வீர்!*


*_சங்கம் கடந்து சங்கமிப்பீர்!_*

*_எத்தகைய தியாகத்திற்கும் தயாராவோம்!_*

*_இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்க!_*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: