Wednesday 29 August 2018

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_97.html


*⭐'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.*


*⭐பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம் மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.*


*⭐ஆதாரம் இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.*


*⭐இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.*


*⭐தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.*


*_அதில், கூறப்பட்டுள்ள தாவது:_*


*⭐அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.*


*⭐பள்ளி சான்றிதழ் பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும்.*


*⭐வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.*


*⭐இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: