*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_54.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 10 நாள் : 29.08.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐கேரள மாநிலத்தில் அதிதீவிர இயற்கைப் பேரிடரால் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவி புரிவதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நம் இயக்கத் தோழர்களிடம் நிதி உதவி கோரப்பட்டது.*
*⭐மாநில அமைப்பின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு நம் பேரியக்கத் தோழர்கள் இமைப்பொழுதும் சோராமல் களப் பணியாற்றி நிதி உதவிகளை மாநில மையத்திற்கு அளித்துள்ளனர்.*
*⭐தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தனது உறுப்பினர்களிடம் கேரள மக்களுக்கு உதவி புரிவதற்காக நிதி உதவி கோரிய ஒரே ஆசிரியர் அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*⭐இதன்மூலம் போராட்டக் களங்களில் வீறுகொண்டெழுகின்ற வீரமிக்க இயக்கம் மட்டுமல்ல் சமூக அக்கறையோடு மற்றவர்களின் துயர் துடைப்பதிலும் ஈரமிக்க இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.*
*⭐கேரள மக்களுக்கு உதவுவதற்காக அதிக அளவில் நிதி திரட்டி தங்களது இயக்கக் கடமைகளை நிறைவேற்றிய பேரியக்கக் தோழர்களுக்கு மாநில மையத்தின் பாராட்டுக்கள்; நன்றிகள்.*
*⭐குறிப்பாக சிவகங்கை, திண்டுக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத் தோழர்களின் பங்களிப்பு கூடுதல் சிறப்புக்குரியது.*
*⭐நம் பேரியக்கத்தோழர்கள் அளித்த நிதியை முறையாக விரைந்து கேரள அரசிடம் அளிக்கும் பொருட்டு இதுவரை நிதி உதவி அளிக்காத மாவட்டக்கிளைகளும், கூடுதலாக நிதி உதவி அளிக்க விரும்பும் மாவட்டக்கிளைகளும் 05.09.2018க்குள் மாநில மையத்திற்கு அளித்திட தோழமையுடன் மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*
*தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment