*ஜாக்டோ ஜியோ சார்பாக 04.10.2018 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/04102018.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16 நாள் : 29.09.2018.*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாட்டை பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடத்தி முடித்துள்ள நமக்கு, அடுத்ததாக நம் முன் உள்ள மிக முக்கியக் களப்பணி ‘ஜேக்டோ ஜியோ” என்னும் மகத்தான கூட்டமைப்பு அறிவித்துள்ள 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டம்.*
*⭐தனிச்சங்கப் போராட்டமாக இருந்தாலும் சரி, கூட்டுப்போராட்டமாக இருந்தாலும் சரி வேங்கையின் வேகத்தோடு களப்பணியாற்றக் கூடிய நம் பேரியக்கத் தோழர்கள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் ஜேக்டோ ஜியோவின் 04.10.2018 ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தை 100மூ வெற்றிகரமாக்கிட கண்துஞ்சாது களப்பணி ஆற்றவேண்டும் என்று மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*⭐இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் CPS ரத்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டம் தமிழ்;நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான போராட்டம். பணி ஓய்விற்குப் பின்பு தமிழ்நாட்டின் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றுகிற திட்டத்தை எதிர்த்து நடைபெறுகிற உரிமை மீட்புப் போராட்டம்.*
*⭐‘04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியத்தைப் பிடிப்போம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்” என்ற அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நம் பேரியக்க உறுப்பினர்கள் அனைவரும் 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் தீரத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.*
*⭐இன்றைக்கு நாம் எதிர்கொள்கிற ஒரு நாள் ஊதிய இழப்பு, ஒரு மாத ஊதிய இழப்பு போன்றவைகளெல்லாம் பணிநிறைவுக்குப் பிந்தைய நம் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான முதலீடுகள் என்பதை நம் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.*
*⭐‘கிளையில் அமரும் பறவை கிளை முறிந்து விடும் என்று அஞ்சுவதில்லை - ஏனெனில் பறவையின் நம்பிக்கை கிளையில் இல்லை அதன் சிறகுகில் தான் இருக்கிறது.*
*"ஜேக்டோ ஜியோ என்ற அக்கினிக்குஞ்சு தன் சிறகை விரித்து விட்டது”*
*ஒன்றுபட்ட போராட்டம்!* *வென்று காட்டும் நிச்சயம்!*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment