Monday, 1 October 2018

*கல்வித்துறை தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்களையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு குறித்து TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/tnptf.html



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக இன்று (01.10.2018)*

*⚡தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் _மதிப்புமிகு.அ.கருப்பசாமி_ அவர்களையும்,*

*⚡ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கூடுதல் மாநில திட்ட இயக்குநர் _மதிப்புமிகு.இரா.சுடலைக்கண்ணன் இ.ஆ.ப.,_ அவர்களையும்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*⚡மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_*

*⚡பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு,_*

*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_*

*உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பல்வேறு ஆசிரியர் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது மற்றும் பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டது.*



*⭐கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி 10-ற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மூடும் முடிவினை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.*


*⭐15-ற்குக் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் இல்லை எனும் அறிவிப்பானது, அப்பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவே, இம்முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.*


*⭐அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசின் நலத்திட்டங்கள் தற்போது வழங்கப்படுவது இல்லை. அதனை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.* 


*⭐புதிய கற்றல் கற்பித்தல் முறையின்கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு  வழங்கப்பட்ட TAB அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. மாணவர் நலனையும் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் TAB வழங்க வேண்டுமாறு வலியுறுத்தப்பட்டது.*


*⭐நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான B.Lit., ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.*


*⭐பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பின்னேற்பு அனுமதி, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் நலன் கருதி உடனடியாக பின்னேற்பு வழங்குவது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.*


*⭐தொடக்கக்கல்வி இயக்குநர் _மதிப்புமிகு.அ.கருப்பசாமி_ அவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கூடுதல் மாநில திட்ட இயக்குநர் _மதிப்புமிகு.இரா.சுடலைக்கண்ணன்_ இ.ஆ.ப., அவர்களும் நமது கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி இதுகுறித்த பரிந்துரைகளை அரசிற்குக் கொண்டு சேர்த்திட உறுதியளித்தார்கள்.*




*⚡தோழமையுடன்,*

*_ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: