*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு சிவகங்கையில் நடந்தது.*
*⚡மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் _தோழர்.தாமஸ் அமலநாதன்_ தலைமை வகித்தார்.*
*⚡மாவட்ட துணைச் செயலாளர் _தோழர்.ஜெயக்குமார்_ அனைவரையும் வரவேற்றார்.*
*⚡மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ மாநாட்டு அறிக்கை வாசித்தார்.*
*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி,_ மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.சிங்கராயர்,__தோழர்.ஆரோக்கியராஜ்,__தோழர்.ஞான அற்புதராஜ்_ முன்னிலை வகித்தனர்.*
*⚡மாநிலத் துணைத்தலைவர் _தோழர்.மலர்விழி_ மாநாட்டு உரை ஆற்றினார்.*
*⚡மாநில துணைப்பொதுச் செயலாளர் _தோழர்.கணேசன்_ இயக்க கொடியேற்றி மாநாட்டு பேரூரை ஆற்றினார்.*
*⚡மாவட்டத் துணைச் செயலாளர்கள் _தோழர்.ரவி,__தோழர்.ஜீவா,__தோழர்.ஆனந்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் _தோழர்.மாலா,__தோழர்.ஜஸ்டின் திரவியம்,_ மாவட்ட பொருளாளர் _தோழர்.குமரேசன்,_ தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் _தோழர்.இளங்கோ_ மற்றும் அனைத்து வட்டாரச் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர்.*
*⭐மாநில துணைப் பொதுச் செயலாளர் _தோழர்.கணேசன்_ செய்தியாளர்களிடம் கூறியதாவது.*
*⭐இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களிலும் மிகப்பெரிய ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.*
*⭐இதனை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 26 அன்று சென்னையில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் போராட்ட பிரகடன மாநாட்டை நடத்த உள்ளோம்.*
*⭐அம்மாநாட்டில் தமிழக அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் போராட்ட அறிவிப்பை வெளியிட இருக்கிறோம்.*
*⭐புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் காலத்தை சிந்துபாத் கதை போல நீடித்துக் கொண்டே போகும் தமிழக அரசின் செயலிற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.*
No comments:
Post a Comment