*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு 26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*
*⭐சேலம் மாவட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு சேலம் சி.எஸ்.ஐ பள்ளி அருகிலுள்ள சூஸன் மஹாலில் மாவட்ட அமைப்பாளர் _தோழர்.ந.பெரியசாமி_ அவர்கள் தலைமையில் நடைபெற்ளது.*
*⭐மாவட்டத் துணை அமைப்பாளர் _தோழர்.மா.செல்வராஜ்_ வரவேற்புரை ஆற்றினார்.*
*⭐முன்னாள் மாவட்டச் செயலாளர் _தோழர்.மா.செல்வம்_ முன்னிலை வகித்தார்.*
*🔶மாநிலத் தலைவர் _திருமதி மு.மணிமேகலை_ அவர்கள் மாநாட்டு பேருரை ஆற்றினார்.*
*🔶மாநில துணைத்தலைவர் _தோழர்.அ.ரஹும்_ அவர்கள் மாநாட்டு எழுச்சியுரை ஆற்றினார்.*
*⭐வரும் 26 ம் தேதி சென்னையில் 20000 ஆசிரியர்கள் பங்கேற்கும் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு என்னும் ஒற்றைக்கோரிக்கை மாநாட்டை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. இந்த மாநாட்டிற்கு ஆயத்தம் செய்யும் விதமாக சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இந்த ஆயத்த மாநாட்டில் ஆசிரியர்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.*
*⭐மாவட்டத் துணை அமைப்பாளர் _தோழர்.ஐ.சரவணன்_ நன்றி உரையாற்றினார்.*
No comments:
Post a Comment