Monday 22 October 2018

*வடகிழக்கு பருவமழை வரும் 26 ம் தேதி முதல் துவங்க இருக்கிறது, மழை காலங்களில் இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/26.html


*🌟மழை பொழியும் நேரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகள்..*


*_⚡படம் 1:_*

*வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 மீட்டர் இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்.*


*_⚡படம் 2:_*

*மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமாக மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்.*


*_⚡படம் 3:_*

*கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது.*


*_⚡படம் 4:_*

*கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: