*ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி பின்னேற்பு அனுமதி வழங்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரம் வழங்குவது குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*
*🌟ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி பின்னேற்பு அனுமதி வழங்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரம் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*
*🌟மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் பெறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் அண்ணார்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரத்தினை உடன் அனுப்புமாறு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டுள்ளது.*
*🌟மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து கோரிய விபரம் பெறப்படாததால் அரசுக்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மேற்காண் பொருளில் தனி கவனம் செலுத்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் அறிக்கையினைப் பெற்று அனுப்பி வைக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.*
No comments:
Post a Comment