*ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_51.html
*⭐திருவண்ணாமலை மாவட்டம் மேல் நாச்சப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.10.2018 அன்று பள்ளி வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திரு.கண்ணன் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்பது காண்போரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.*
*⭐இச்சம்பவம் தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுடைய உயிருக்கே உத்திரவாதமற்ற நிலையை உணர்த்துவதாக உள்ளது.*
*⭐ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழும் நிலையில் உரிய அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு அதன் உண்மைத்தன்மை அறியப்பட வேண்டும். அதை விடுத்து இவ்வாறான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.*
*⭐சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தமிழக அரசும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*⭐மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment