*10.11.2018 ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டமும், TNPTFன் நிலைப்பாடும்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/10112018-tnptf.html
*⭐நவம்பர் 9 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் இரு கூட்டமைப்புகளும் இணைவது என முடிவாற்றிய பின் நவம்பர் 10 அன்று சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மிக நீண்ட விவாதம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் கருத்துக்களை முன் வைத்த உறுப்பு சங்கங்களின் மாநில நிர்வாகிகளில் 70 சதமான பேர் ஏற்கனவே திட்டமிட்ட நவம்பர் 27ம் தேதியை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது எனவும், ஒருங்கிணைப்பாளர்களில் சில மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பிரிந்த சங்கங்கள் இணையும்பொழுது இறுதி யுத்தம் வரை தொடர்வதை உறுதிபடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.*
*⭐இதில் பங்கேற்ற *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர் மயில்_ அவர்கள்* *நவம்பர 27ஐ நோக்கி அனைத்து பணிகளையும் முடுக்கி விட்ட நிலையில் தேதி மாற்றம் என்பது ஏற்புடையதல்ல என்பதையும், ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கான அனைத்து நிலையிலும் தயாரான நிலையில் மாற்றம் என்பது சோர்வை தரும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்கள்.*
*⭐ _களம் சூடாக உள்ள நிலையில் கீழ்மட்ட உறுப்பினர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 27 வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும்_* *என்பதே நமது நிலைப்பாடு என்பதை பொதுச்செயலாளர் அவர்கள் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்கள்.*
*⭐பல்வேறு விவாதங்களுக்கு பின்னால் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்த ஒருங்கிணைந்த முடிவினை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், பிளவுபட்ட அமைப்புகள் போராட்ட களம் நோக்கி வருவதென முடிவெடுத்துள்ள நிலையில் சில சமரசங்கள் கூட்டமைப்பு கருதி ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.*
*⭐ _தலைமைச்செயலகத்தில் உள்ள சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க_* *ஆயத்தமாகியுள்ள சூழலும் கருத்தில் கொள்ளப்பட்டது. எனவே தேதி மாற்றம் என்பதில் தவிர்க்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே நவம்பர் 27 என்பதை டிசம்பர் 4 என ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட முடிவை அனைவரும் ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்களை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 11 பேருடன் பிரிந்த சென்றவர்களுக்கு 9 பேர் என 20 ஒருங்கிணைப்பாளர்கள் என்பது முன்மொழியப்பட்டது.*
*⭐இந்த முடிவானது நவம்பர் 15 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும். அன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும். கூட்டுபேர வலிமையை கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவிற்கு அனவைரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.*
⭐உயர்மட்டக்குழு கூட்டம் நிறைவு பெற்ற பின் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நமது இயக்கத்தின் ஆணை எரிப்பு போராட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத்தலைவரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளருமான _தோழர் மோசஸ்_ அவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.*
*⭐இடைநிலை ஆசிரியர்களுக்காக எங்கள் இயக்கம் தனிச்சங்கமாகவும், கூட்டமைப்போடு இணைந்தும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பிரதான உறுப்பினர்களாக கொண்டுள்ள எங்கள் அமைப்பு அவர்களது இழப்பிற்காக உச்சபட்ச போராட்டத்தில் இறங்குவது என எங்கள் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவாற்றியுள்ளது. பல்வேறு அமைப்புகள் உள்ள கூட்டமைப்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் மட்டும் ஒற்றைக்கோரிக்கையாக வைத்து போராடுவது என்பது இயலாத ஒன்றாகும்.*
*⭐இது சம்பந்தமாக அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தை ஆரம்பப்பள்ளிகளில் உள்ள சங்கங்கள் தனியாக நடத்தலாம் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களிடம் கோரிக்கை வைத்தோம். கால தாமதம் ஆன நிலையில்தான் எங்களது மாநிலப்பொதுக்குழு மற்றும் செயற்குழு வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை அறிவித்துள்ளது.*
*⭐ _ஆணை எரிப்பு நடந்தால் ஜெயில் உறுதி_* *என்று தெரிந்தே நாங்கள் களத்தில் உள்ளோம். இதற்காக அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைத்து வந்து* *_சென்னையில் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்ட ஆயத்த மாநாடை நடத்தியுள்ளோம். கடந்த வாரம் மண்டல அளவிலான ஆயத்த கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். நாளை மாவட்ட அளவிலான ஆயத்த கூட்டங்கள் நடக்க உள்ள சூழலில் எங்களது போராட்டத்தை கைவிட இயலாது என மிகவும் ஆணித்தரமாக தெரிவித்தார். ஒரு வேளை ஜாக்டோ ஜியோ அரசாணை எரிப்பு போன்ற உச்பட்ச போராட்டத்தை அறிவிக்குமானால் எங்கள் மாநில செயற்குழு இம்முடிவு குறித்து ஆலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டது._*
*⭐நமது நியாயமான போராட்ட குணத்தை அறிந்த ஒருங்கிணைப்பாளர்கள்* *_நமதமைப்பு வருகிற 26 நடத்த உள்ள அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்திற்கு தடையேதுமில்லை_* *என முடிவாற்றினார்கள். இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நவம்பர் 15 அன்று அரசாணை 56ஐ எரிக்க திட்டமிட்டடிருந்த போராட்டத்திற்கும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டு தீர்மானமாக்கப்பட்டுள்ளது. எனவே பிரதான உயிர்க்கோரிக்கைக்கு தனிச்சங்க நடவடிக்கைகளுக்கு தடையேதுமில்லை.*
*⭐மேலும் *_சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கீடு செய்தி முழுவதும் போலியானது._* *இது குறித்து நவம்பர் 15 அன்று தான் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.*
*⭐எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்க்குணமிக்க தோழமைகளே நவம்பர் 26 என்பது நமது இயக்க வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள பொன்னான நாள். தமிழக சிறைகளில் சமரசமற்ற போராளிகள் குடிபுகும் நாள். கோரிக்கை வென்றெடுப்பது ஒன்றே நமது குறிக்கோள். இடைநிலை ஆசிரியர்களின் இன்னல்கள் தீர்க்க இயக்கம் விடுத்துள்ள அறை கூவலை ஏற்று இன்று முதல் களப்பணி தீவிரமாகட்டும். மாவட்ட, வட்டார, நகர கிளைகளில் ஆயத்த கூட்டங்களை நடத்தி 100 சதவீத உறுப்பினர்களை பங்கேற்க செய்து அரசாணையை தீயிட்டு கொளுத்தும் போர்க்களத்தில் களமிறக்குவோம்.* சிறை வளாகத்தில் சந்திப்போம்.
*⭐ஒன்றுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிக்கும் தீரமிக்க போராட்டத்திலும் எழுச்சியோடு பங்கேற்போம்.*
*இன்குலாப்,*
*இன்குலாப்,*
*இன்குலாப் ஜிந்தாபாத்.*
*🔅தகவல் பகிர்வு:*
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
மாவட்டச் செயலாளர்
*TNPTF*
சிவகங்கை மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment